Pages

mardi 11 décembre 2012

கறிக் குழம்பு

 


தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
 (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 5 பொடியாக வெட்டவும்   
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தாளிப்பதற்கு தேவையானது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கருவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் – கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

பீன்ஸ் சூப்

 

தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - 2
தண்ணீர் - 150 மி.லி
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை

பீன்ஸ், காரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடாகியதும் வெண்ணெய் விட்டு, நறுக்கிய பீன்ஸ், காரட் வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து நீர் விட்டு அரை மணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரில் பால் அல்லது தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் உள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் ஒரளவு கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும்.

நண்டு சூப்

 

தேவையான பொருட்கள்:            
Photo : வாங்க சாப்பிடுவோம்நண்டு – அரை கிலோ
வெங்காயத்தாள் – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
கான்ப்ளவர் – ஒன்றரை டீஸ்பூன்
அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
பால் – கால் கப்
வெண்ணெய் அல்லது எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:
 நண்டு வேக வைத்து சதை எடுத்து வைக்கவும். (இல்லையென்றால் அப்படியே கூட போடலாம்) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கி (வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். கடைசியில் தூவி பரிமாறுவதற்காக) (பாலில் கான் ப்ளவரை கரைத்து வைக்கவும்). வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினாமோட்டோ, கான் ப்ளவர் கலந்த பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத்தூள் தூவி, வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

 

முந்திரி பருப்பு பகோடா


 

தேவை:                                                                    

Photo : இதயம் எல்லோருக்கும் இருக்கு....ஆனால்.......
சிலரிடம் பஞ்சாகவும்...........
சிலரிடம் கல்லாகவும் இருக்கு.
முந்திரி – 250 கிராம்
கடலை மாவு – 1 கிலோ
வனஸ்பதி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 250 கிராம்
அரிசி மாவு – 150 கிராம்
ப. மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வனஸ்பதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு இவற்றை போட்டு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.

jeudi 1 novembre 2012

பொரி விளங்கா






நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க… இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்… இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது.. உடலுக்கு சத்தான, மிகவும் ருசியான இதை வீட்லயே ரொம்ப சுலபமாக செய்யலாம்… செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க…….
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி – 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு – 1/4 படி
தேங்காய் – 1 துருவியது
வெல்லப்பாகு தயாரிக்க:
வெல்லம் – 1 கிலோ
சுக்கு – ஒரு துண்டு
ஏலக்காய் – 4
செய்முறை:
வெல்லத்தை கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.
சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.

 


பூரி + உருளை கிழங்கு குருமா






தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு -சிறிதளவு
சீரக பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்.. (பொரிப்பதற்கு.)
வெதுவெதுப்பான நீர் – மாவு பிசைவதற்கு.
செய்முறை:
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும். பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் படுமாறு தடவவும்.ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும். எண்ணையை வாணலில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போன்று வட்டவடிவு வருமாறு…தேய்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள வட்ட வடிவான மாவு உருண்டைகளை.. போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும். ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்..இரு பக்கங்களும் சிவந்ததும் அதை எடுக்கவும்… சுவையான பூரி தயார்.இப்படி ஒவ்வென்றாக …தேவையான அளவிற்கு சுட்டு வைத்து கொள்ளவும்..பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
+
உருளை கிழங்கு குருமா..
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய்- 8
தக்காளி – 2
பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
கருவேப்பிலை- கொஞ்சம்
எண்ணை – சிறிதளவு
செய்யும் முறை:
முதலில் உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு உரித்தது ஆகியவற்றை பச்சை மிளகாய் நைசாக நறுக்கிவைத்து கொள்ளவும் ..வாணலில் சிறிது எண்ணையை விட்டு காய்ந்தாவுடன் கடுகு உளூந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள் இவற்றை போட்டு வதக்கவும் .. நன்றாக வதங்கியவுடன் .. உரித்த உருளையை கையால் பிசைந்தவாறே வாணலில் போடவும். பிறகு சிறிது நீர் விட்டு கொதிக்கவிடவும் … அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. பததிற்கு வந்த வுடன் இறக்கவும்..
சுவையான பூரி + உருளை கிழங்கு குருமா தயார்..

காலை உணவு




காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர உலகத்தில், பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
சுறுசுறுப்பாக இருக்க
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு , காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
எலும்புகள் ஆரோக்கியம்
 
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
நினைவுத்திறன் அதிகரிக்கும்
காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும்.குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும்.
உடல் எடை அதிகரிக்கும்
சில குழந்தைகள் நொறுக்கு தீனியாக சாப்பிட்டு உடல் குண்டாக இருப்பார்கள். அவர்கள் உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர். சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சரிவிகித உணவு தேவை
காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.
எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

 





வட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு?




தேவையானவை:
சர்க்கரை – 250 கிராம்
தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப்
முட்டை – 5
ஏலக்காய்த்தூள் – அரைதேக்கரண்டி
கஜூ – 30 கிராம்
பிளம்ஸ் – 30 கிராம்
ஜாதிக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி(விரும்பினால்)
மாஜரின் – ஒரு தேக்கரண்டி
 
செய்முறை:
தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.
எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் அள்ளி இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).
அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.
அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.
குறிப்பு:
சர்க்கரைக்கு பதிலாக கித்தூள் பாவிக்கலாம். ஏலக்காய்த்தூளுக்கு பதிலாக வெனிலா பாவிக்கலாம்.
மாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம். தேங்காய் பாலுக்கு தடிப்புகூடிய முதல்பாலை விடவும்.
எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். தேங்காய்ப்பாலில் சர்க்கரையை கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.

 

mercredi 24 octobre 2012

கணவாய் பொரிந்து

தேவையான பொருட்கள்:


கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்)
கீரை-15- 20 இலை
இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி            
உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி
சிவப்பு வெங்காயம்-1
கருவேப்பிலை- 15
தக்காளிப் பழம்- 1
பழப்புளி- 1 மேசைகரண்டி
ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
சின்னச் சீரகம்- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
மிளகாய்த் தூள்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- தேவையான அளவு
கரும்மசாலா தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine)- 150 ml
பால் (தேங்காய் பால்- கொழுப்பு குறைந்தவர்களுக்கு, ஆடை நீக்கப் பட்ட பசுப் பால்- கொழுப்பு கூடியவர்களுக்கு)

செய்முறை:

வெங்காயம், தக்களிப்பழம், கீரை, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
உள்ளி, இஞ்சி இவற்றை பசையாக அரைத்து எடுக்கவும்.
ஏற்கனவே சுத்தம் செய்யப் பட்ட கணவாயை நடுத்தர துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரும்மசாலத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, உள்ளி (அரைத்தது), சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine) இவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
சிவப்பு வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு பொரிக்கவும்.
வெங்காயம் பொரிந்து வரும் போது, கடுகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளிப் பழம் இவற்றையும் சேர்க்கவும்.
பழப்புளியை (அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து) பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், அதனுடனையே பசுப்பால் அல்லது தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். (பாலையும், புளியயும் சேர்த்தால் திரைஞ்சது போல் வரும், ஆனால் சில நிமிடங்களில் கலவையில் திரைவுத்தன்மை போய்விடும்.)
இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)
15-20 நிமிடங்களில் கணவாய் அவிந்து விடும். ஒன்று எடுத்து ருசி பாருங்கள், உங்களுக்கு ஏற்ற நிலையில் அவியவில்லை என்றால், தொடர்ந்து 5-10 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கீரையையும், கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

jeudi 18 octobre 2012

மீன் பிரியாணி

பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதை செய்து ருசித்துப் பாருங்களேன், புரியும்!
தேவையான பொருட்கள்:                                                   
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக் கரண்டி
செய்முறை:
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் “தம்” சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.
* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

அவல் பொங்கல் செஞ்சு பாருங்க…

இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…. அவல் பொங்கல் செஞ்சு பாருங்க… வித்தியாசமான சுவையுடன் பிரமாதமாக இருக்கும்……..
 
தேவையான பொருட்கள்:
அவல் – 1/2 கிலோ                                                                  
வெல்லம் – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 150 கிராம்
ஏலக்காய் – 6
கிஸ்மிஸ் பழம் – 20
தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் – 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது – 1 கப்
நெய் – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
 
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

இறால் வடை

தேவையானவை !
இறால் – 10
வெங்காயம் – ஒன்று(நடுத்தர அளவு)                                       
காய்ந்த மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி
சீரக தூள் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி தழை – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை !
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.
வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.
வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.

வெஜிடபிள் கட்லட் செய்து பழகுவோமா??



தேவையானவை:                                                                       
 
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பீன்ஸ் – 6
காரட் – 1
பச்சைபட்டாணி – 1 கப் பிடிஅளவு
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
மயோனைஸ் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
பொட்டுக்கடலை பவுடர் – 1/4 கப்
பச்சைமிளகாய்விழுது – 1 டீஸ்பூன்
டால்டா – தேவைக்கு
 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
காரட், பீன்ஸை மிகப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேக வைக்கவும். மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
நீர்க்க இருந்தால் இன்னும் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் ஓரிரு டீஸ்பூன் நீர் சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இதனை ஒரு ஆரஞ்ச் பழ அளவு எடுத்து வட்டமாக தட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் டால்டா விட்டு மிதமான தீயில் முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
இதே போல் மீதமுள்ள விழுதில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
நான்காக அல்லது ஆறாக கட் செய்து ஆனியன் ரிங்க், வட்டமாக நறுக்கிய கேரட், வெள்ளரி தூவி அலங்கரிக்கவும்.

dimanche 14 octobre 2012

நூடுல்ஸ்- இறால்



தேவையானவை:
 
மெகி நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
இறால்- 20 துண்டுகள்
முட்டை-2
மிளகு- கால் ஸ்பூன்
வெங்காயம்-1
கேரட்-25 கிராம்
முட்டைகோஸ்-50 கிராம்
பீன்ஸ்-25 கிராம்
கறிவேப்பிலை-6 இலைகள்
பச்சைமிளகாய்-1
பூடு-6 பல்
உப்பு-தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்-4 ஸ்பூன்
 
 
செய்முறை:
 
மேகியை சுடுநீரில் வேக வைத்து நீர் வடித்து எடுக்கவும். குளிந்த நீரில் கழுவிய பின் எண்ணெய் தடவி வைக்கவும்.
முட்டையை உப்பு,மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூடு சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும்.
பின்னர் காய்கறி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
இப்போது நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து காய்கறி ஒரு சேர வதக்கிவிடவும்.
பின் இறக்கி பரிமாறவும்.
குறிப்பு:
மேகி மசாலா தூளே தேவையான நிறத்தை கொடுத்துவிடும். அதனால் பொடி வேறு எதுவும் சேர்க்கத்தேவையில்லை.

mercredi 12 septembre 2012

சுரைக்காய் சப்பாத்தி

சுரைக்காய் சப்பாத்தி

தேவையான பொருட்கள்                                                   
 
Photo : Health Benefits Of Cabbage~

>Cabbage is a wonderful cleanser of the internal system and the whole body and is also highly antiseptic. 
>It is good for constipation and helps to reduce high blood pressure. 
>It is often used in diet programmes as it is said to aid slimming.
>it is also often prescribed to treat respiratory problems such as asthma, coughs, colds and flu. 
>People who are prone to sweating should consume some raw cabbage every day. 
>Vitamins : A, B, C and E 
Minerals : Calcium, chlorine, iodine, iron, magnesium, phosphorous, potassium and sulphur.!கோதுமைமாவு-1கப்
சுரைக்காய்துருவியது-2டீஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது-1டீஸ்பூன்
சீரகத்து£ள்-1டீஸ்பூன்
உப்பு,தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை-
 
எல்லாப்பொருட்களையும் ஒன்றாகக்கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப்பிசையவும். பின்ளர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். டால் அல்லது சப்ஜியுடன் பரிமாறவும்.

ஆப்பிள் அல்வா

                ஆப்பிள் அல்வா

ஆப்பிள் அல்வாதேவை:
ஆப்பிள் துருவியது – 200 கிராம்
கோதுமை மாவு – 200 கிராம்
நெய் – 100 மில்லி
ஏலத்தூள் – சிறிதளவு
சீனி – 400 கிராம்
பால் – 200 மில்லி
முந்திரிபருப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
 
செய்முறை:
 
பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேக விடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரிபவுடர் சேர்த்து கிளறவும் சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வாபதம் வந்ததும் முந்திரிபருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். இது சுவையாக இருக்கும் உடம்புக்கு சத்தானது.

jeudi 6 septembre 2012

ஆட்டுக் குடல் குழம்பு

 

                                ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:                                                                          
Photo : What is in your mind while seeing this?
Visit www.pagejaffna.com Right Now...ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

பார்ஸி கோழிக்கறி

பார்ஸி கோழிக்கறி

Photo : தமிழ் -கருத்துக்களம்-
பழம் வேணுமா பழம்..  பழம் ?! :)தேவை:
கோ ழிக்கறித் துண்டுகள் – 1 கிலோ        
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 10
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 1/2 கப்
பெ.வெங்காயம் – 2
தக்காளி கெச்சப் – 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து கோழிக்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும். இக் கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்

காளான் சாண்ட்விச்


                               காளான் சாண்ட்விச்

Photoதேவையான பொருட்கள்:-                                       
காளான் – 250 கிராம்
பூண்டு – 4 பல்
வெங்காயம் – 50 கிராம்
இஞ்சி – சிறுதுண்டு
மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரட்- 1 பாக்கெட்
எண்ணெய் – 100 மி.லி.
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
காளான், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ளவற்றுடன் பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தட்டிப் போட்டுச் சேர்த்து வதங்க விட வேண்டும்.
பின்பு சிறிது தண்ணீரைத் தெளித்து உப்பு, மசாலாத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் தடவி ரொட்டித் துண்டுகளை இருபுறமும் சூடாக்கிய பின் ரொட்டித் துண்டுகளுக்கிடையில் காளான் கறியை வைத்து உண்ணலாம்.

வறுத்த நண்டு



                                         வறுத்த நண்டு


தேவை:                                                                        
Photo
நண்டு – 5
இஞ்சி – 1 அங்குலம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மல்லி (தனியா) – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 3


செய்முறை:
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.

mercredi 11 juillet 2012

முருங்கைப்பூ கூட்டு



முருங்கைப்பூ - 2 கைப்பிடி
  • 2. கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
  • 3. பயத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • 4. இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • 5. வெங்காயம் - 1
  • 6. தக்காளி - 1
  • 7. பச்சை மிளகாய் - 2
  • 8. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  • 9. மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
  • 10. தனியாதூள் - 1 தேக்கரண்டி
  • 11. உப்பு - தேவைக்கு
  • 12. தேங்காய் விழுது - 2 அ 3 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • 1. பட்டை - ஒரு சிறு துண்டு
  • 2. லவங்கம் - 2 அ 3
  • 3. சோம்பு - 1/4 தேகரண்டி
  • 4. கறிவேப்பிலை - சிறிது
  • 5. எண்ணெய் - தேவைக்கு
    • முருங்கைப்பூவை அலசி,சுத்தப் படுத்திக் கொள்ளவும்.கடலைப்பருப்பு மற்றும் பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில், எண்ணெய் ஊற்றி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
    • பின்,தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.இதனுடன் முருங்கைப்பூ சேர்த்து,மஞ்சள்தூள், மிளகாய்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
    • முருங்கைப்பூ வெந்ததும்,அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.பின், தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்த்ததும்,இறக்கி விடவும்.
    • சுவையான முருங்கைப்பூ கூட்டு தயார். இது தோசை,சப்பாத்தி,சாதத்துடன் நன்றாக இருக்கும்.

    Note:

    முருங்கையின் அனைத்து பாகங்களும்(முருங்கைக்காய், முருங்கைகீரை,முருங்கைப்பூ) சத்து நிறைந்தவை. முருங்கைப் பூவை யாரும் அவ்வளவாக உபயோகிப்பது இல்லை. இம்முறையில் கூட்டு செய்தால், சுவையாகவும் இருக்கும். அதன் சத்தும் கிடைக்கும்.

    jeudi 5 juillet 2012

    கோழிக்கறி வெள்ளை குருமா

  • கோழிக்கறி - 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 3 தேக்கரண்டி
  • கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 3 ஸ்பூன்.
    • கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
    • முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
    • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    • வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போடவும்.
    • பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    • வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    • பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
    • நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
    • கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
    • கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.
    • கோழிக்கறி முழுவதும் வெந்த பின் அரைத்த முந்திரி சேர்த்து கலக்கி உடனே இறக்கவும்.
    • அதன் மீது வறுத்த முந்திரி தூவி சூடாக பரிமாறவும். சுவையான ஒயிட் சிக்கன் குருமா தயார்.

    Note:

    நெய் சோறு, புலாவ், சாதம் போன்றவற்றிற்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

    பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

  • பொன்னாங்கண்ணி கீரை - 2 கப் ( ஆய்ந்தது)
  • பாசிப்பருப்பு - அரை கப்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் - 5
  • தனியா - அரை மேசைக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
  • தக்காளி - ஒன்று
  • பால் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
    • கீரையோடு மஞ்சள் தூள், பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    • வாணலியில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, சீரகம் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் நைசாக பொடிக்கவும்.
    • குக்கரை திறந்து கீரையை லேசாக மசித்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
    • பின் உப்பு, தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கெட்டியான பின் பால் சேர்த்து இறக்கவும்.

    

    மாம்பழ கறி

  • 1
  • . ரொம்ப பழுக்காத மாம்பழம் - 1
  • 2. பச்சை மிளகாய் - 1
  • 3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  • 4. மிளகாய் வற்றல் - 1
  • 5. தயிர் - 1/2 கப்
  • 6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • 7. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  • 8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • 9. உப்பு
  • 10. கறிவேப்பிலை
  • 11. கடுகு, வெந்தயம் - தாளிக்க
  • 12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • 13. வெங்காயம் - 1/2 [விரும்பினால்]
  • 14. கொத்தமல்லி இலை
  • 15. சீரகம் - 1/4 தேக்கரண்டி
    • மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
    • இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக விடவும்.
    • தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
    • மாம்பழம் சாஃப்டானதும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
    • பின் தயிரை அடித்து இதில் கலந்து விடவும்.
    • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாம்பழ கலவையில் சேர்க்கவும்.
    • எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.

    

    vendredi 25 mai 2012

    பலாக்கொட்டை புளிக்கூட்டு

  • வேக வைத்து தோலுரித்த பலாக்கொட்டைகள் -ஒருகப்
  • புளி -ஒருநெல்லிக்காயளவு
  • கடலைப்பருப்பு - 50 கிராம்
  • மிளகா வத்தல் - 4
  • கடுகு - ஒருஸ்பூன்
  • மஞ்சப்பொடி - அரைஸ்பூன்
  • பெருங்காயப்பொடி - ஒருஸ்பூன்
  • தேங்கா எண்ணெய் - 2 ஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
    • கடலைப்பருப்ப சுத்தம் செய்து குக்கரில் வேக விடவும்.
    • ஏற்கனவே வேகவைத்து தோலுரித்துவைத்திருக்கும் பலாக்கொட்டைகளையும் சேர்த்து கொதிக்கவிடவும்மஞ்சப்பொடி சேர்க்கவும்.
    • நன்கு வெந்ததும் புளியைக்கரைத்துவிட்டு புளிவாசம் போகக்கொதிக்க விட்டு இறக்கவும் உப்பு சேர்க்கவும்.
    • கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாவத்தல் பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து சூடாகப்பரிமாறவும்.

    கொத்தவரங்காய் கறி

  • 1. கொத்தவரை - 2 கப்
  • 2. உருளை - 1
  • 3. வெங்காயம் - 1
  • 4. தக்காளி - சில துண்டுகள்
  • 5. பச்சை மிளகாய் - 1
  • 6. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 7. தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • 8. மஞ்சள் தூள் - சிறிது
  • 9. கரம் மசாலா - சிறிது
  • 10. அம்சூர் பொடி - சிறிது
  • 11. உப்பு
  • 12. சீரகம், எண்ணெய் - தாளிக்க
    • உருளை தோல் நீக்கி நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தவரை நார் எடுத்து பொடியாக நறுக்கவும்.
    • எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    • பின் தக்காளி சேர்த்து வதக்கி, காய்கள் சேர்க்கவும்.
    • காய் நீர் இல்லாமல் மூடி வேக விட்டு சற்று கலர் மாற துவங்கியதும் தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும் (அம்சூர் பொடி தவிற)
    • பின் நீர் விட்டு மூடி வேக விடவும்.
    • காய்கள் வெந்து நீர் இல்லாமல் வந்ததும் அம்சூர் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும். சாத வகைகளுக்கு நல்ல காம்பினேஷன். ரொட்டிக்கு நன்றாக இருக்கும்.

    Note:

    அம்சூர் (Dry Mango Powder) பொடி சேர்ப்பதால் தக்காளி அளவு சில சிறு துண்டுகளே போதுமானது. இது நீர் இல்லாமல் செய்ய வேண்டிய கறிவகை.

    mercredi 2 mai 2012

    தக்காளி கருணைக்கிழங்கு மசியல்

    • தக்காளி - 2
    • கருணைக்கிழங்கு - 3
    • பெரிய வெங்காயம் - 1
    • மிளகாய்ப் பொடி - 1 - 1.5 டீஸ்பூன்
    • மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
    • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
    • பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    • இஞ்சி - 1 சிறிய துண்டு
    • கருவேப்பிலை, பச்சை கொத்துமல்லி - 1 கைப்பிடி அளவு
    • உப்பு - சுவைக்கேற்ப
    • நல்லெண்ணெய்/ரீஃபைண்ட் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
    • தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
    • பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
    • கருணைக்கிழங்கை, குக்கரில் குழைவாக வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
    • வெந்த கிழங்கை, தோல் உரித்து, மசித்து வைக்கவும்.
    • தக்காளியை சிறு துண்டுகளாக்கி, இஞ்சி, கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
    • அடுப்பில் வாணலியை வைத்து,1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
    • எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
    • இதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, வதக்கவும்.
    • வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, பெருங்காயப் பவுடர் சேர்த்து, 1 நிமிடத்துக்குக் கிளறவும்.
    • பின் அரைத்த தக்காளி விழுதை, இதில் ஊற்றி, மிதமான தீயில், 1 நிமிடம் கிளறவும்.
    • பிறகு மசித்த கருணைக்கிழங்கையும் உப்பையும் இதில் சேர்த்து, தீயைக் குறைவாக வைத்து, நன்றாகக் கிளறவும்.
    • மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை, கொஞ்சம் கொஞ்சமாக, சேர்த்துக் கிளறவும்.
    • சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார்.
    • ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.

    கோதுமை ரவை இட்லி


    கோதுமை ரவை இட்லி

    தேவையானபொருட்கள்


    கோதுமைரவை-1கப்
    கடலைப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
    புளித்த தயிர்-1கப்
    எண்ணெய்-1டீஸ்பூன்
    உப்பு-தேவைக்கேற்ப
    பச்சைமிளகாய்-1
    கொத்தமல்லி-சிறிது
    மிளகு-1/4டீஸ்பூன்

    செய்முறை


    பச்சைமிளகாய்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமைரவையையும்,கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு,மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புளித்ததயிர்,எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சுடாகப் பரிமாறவும்.

    vendredi 27 avril 2012

    உருளை காரகுழம்பு

  • உருளைகிழங்கு -2
  • கொத்தமல்லிதழை-சிறிது
  • புளி -சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்
  • வறுத்து அரைக்க:
  • சின்னவெங்காயம் -10
  • தனியா -2ஸ்பூன்
  • சீரகம் -1/2ஸ்பூன்
  • காய்ந்தமிளகாய் -2
  • பூண்டு -5பல்
  • எண்ணை -1ஸ்பூன்
  • தக்காளி -1
  • தேங்காய்துறுவல் -3ஸ்பூன்
  • தாளிக்க:
  • எண்ணை -2ஸ்பூன்
  • கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்
  • வெந்தயம் -1/4ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது
  • வெங்காயம் -1(நறுக்கவும்)
  • பச்சைமிளகாய் -1(நறுக்கவும்)
    • உருளைகிழங்கை வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
    • வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.
    • புளியை கரைத்துவைக்கவும்.
    • குழம்புவைக்கும் பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    • குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.

    பனீர் பட்டாணி குருமா

  • பனீர் துண்டங்கள் - ஒன்றரைக் கப்
  • புளிக்காத தயிர் - ஒரு கப்
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சைப் பட்டாணி - அரை கப்
  • எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
  • பிரியாணி இலை - 2
  • கிராம்பு - 2
  • பட்டை - ஒரு சிறியத்துண்டு
  • பூண்டு - 2 பல்
  • மிளகாய்பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி
  • தனியாப் பொடி - ஒரு மேசைக்கரண்டி
  • தக்காளி விழுது - கால் கப்
  • உப்பு - தேவையான அளவு
    • பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
    • பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
    • பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
    • பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
    • இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
    • சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
    • நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.

    lundi 23 avril 2012

    வெங்காய வடகம்

  • சின்ன வெங்காயம்(உரித்தது) - 8 கப்
  • வெள்ளை உளுத்தம்பருப்பு - 1.5 கப்
  • கடுகு - 1/2 கப்
  • சீரகம் - 1/2 கப்
  • பூண்டு(உரித்தது) - 1/2 கப்
  • பெருங்காயப் பவுடர் - 1.5 டீஸ்பூன்
  • வெந்தயம்(முதல் நாள் இரவே ஊற வைக்கவும்) - 1/4 கப்
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
    • உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
    • சின்ன வெங்காயத்தை, உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
    • சீரகம், பூண்டு இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
    • உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பருப்பு அரைபட்டால் போதும். இட்லிக்கு அரைப்பது போல அரைக்க வேண்டாம்.
    • ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பருப்பு, சீரகம் பூண்டு விழுது, அரைத்த வெந்தயம், உருவிய கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
    • ஒரு ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, வெயிலில் நன்றாகக் காய விடவும்.
    • ஈரப் பதம் இல்லாமல் 2-3 நாட்கள் காய்ந்ததும், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
    • தேவைப்படும்போது, காய்ந்த எண்ணெயில் இந்த வடகங்களைப் போட்டு, பொரித்துக் கொள்ளலாம்.

     

    வடகம் உருட்டிக் காய வைக்கும்போது, கிள்ளினாற்போல வைக்கவும். ரொம்பவும் உருட்டி, இறுக்கமான உருண்டைகளாக வைத்தால், மேற்புறம் காய்ந்தாலும், உள்ளே ஈரப் பதம் இருக்கும். அப்படி இருந்தால், ஒரு வருடத்துக்கு வைத்திருக்கும்போது, வண்டு வர வாய்ப்பு உண்டு. நன்றாகக் காய வைத்து எடுத்தால், ஒரு வருடம் வரை கெடாது.இந்த வடகத்தைப் பொரித்து, புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, கூட்டாஞ்சோறு இவற்றில் சேர்க்கலாம். சுவை கூடும்.

    dimanche 15 avril 2012

    சுக்கா சிக்கன்

     

    சுக்கா சிக்கன்

    தேவை:

    கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)
    பெரிய வெங்காயம் – 3
    இஞ்சி – 1 துண்டு
    பச்சை மிளகாய் – 2
    பூண்டு – 1
    மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
    தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்
    சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
    கறிமசால்தூள் – 1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
    கொத்தமல்லி இலை – 1 கப்
    எண்ணெய் – 2 கப்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:
    கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    mercredi 11 avril 2012

    ஆட்டுக் குடல் குழம்பு

    ஆட்டுக் குடல் குழம்பு

        
    தேவை:                                                                                           
    ஆட்டுக்குடல் – 1
    மல்லி – 2 தேக்கரண்டி
    வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
    உப்பு – தேவையான அளவு
    மிளகாய் வற்றல் – 6
    சீரகம் – 3 தேக்கரண்டி
    இஞ்சி – 1 சிறு துண்டு
    நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி



    செய்முறை:
    மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.


    vendredi 30 mars 2012

    கீரை குழம்பு

  • அரைகீரை- 2 கப்
  • தக்காளி-6
  • கத்தரிகாய்-100 கிராம்
  • புளிகுழம்பு பொடி-4 ஸ்பூன்
  • மிளகாய் தூள்-அரை ஸ்பூன்
  • புளி- நெல்லிக்காய் அளவு
  • தாளிக்க:-
  • எண்ணெய்
  • வெந்தயம்
  • சோம்பு
  • கடுகு
  • உளுந்து
  • வரமிளகாய்-5
  • வெங்காயம்-2
  • பூடு-8 பல்
    • புளியை ஊற வைத்து பின் கரைத்துக்கொள்ளவும்.அதில் புளிகுழம்பு பொடியை சேர்க்கவும்
    • கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.கீரையை அரிந்து சுத்தம் செய்துக்கொள்ளவும்
    • கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
    • பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
    • தக்காளி சேர்த்து வதங்கியதும் கீரையை சேர்க்கவும்
    • கீரை சுருண்டதும் புளிகரைசல்,கத்திரிக்காய்,உப்பு சேர்த்து வாசனை போக கொதிக்கவிடவும்
    • கீரை குழம்பு தயார்