- பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
- இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
- சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
- நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 27 avril 2012
பனீர் பட்டாணி குருமா
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire