Pages

mercredi 12 septembre 2012

சுரைக்காய் சப்பாத்தி

சுரைக்காய் சப்பாத்தி

தேவையான பொருட்கள்                                                   
 
Photo : Health Benefits Of Cabbage~

>Cabbage is a wonderful cleanser of the internal system and the whole body and is also highly antiseptic. 
>It is good for constipation and helps to reduce high blood pressure. 
>It is often used in diet programmes as it is said to aid slimming.
>it is also often prescribed to treat respiratory problems such as asthma, coughs, colds and flu. 
>People who are prone to sweating should consume some raw cabbage every day. 
>Vitamins : A, B, C and E 
Minerals : Calcium, chlorine, iodine, iron, magnesium, phosphorous, potassium and sulphur.!கோதுமைமாவு-1கப்
சுரைக்காய்துருவியது-2டீஸ்பூன்
பச்சைமிளகாய் விழுது-1டீஸ்பூன்
சீரகத்து£ள்-1டீஸ்பூன்
உப்பு,தண்ணீர்-தேவையான அளவு
செய்முறை-
 
எல்லாப்பொருட்களையும் ஒன்றாகக்கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப்பிசையவும். பின்ளர் சப்பாத்திக்கல்லில் சப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். டால் அல்லது சப்ஜியுடன் பரிமாறவும்.

ஆப்பிள் அல்வா

                ஆப்பிள் அல்வா

ஆப்பிள் அல்வாதேவை:
ஆப்பிள் துருவியது – 200 கிராம்
கோதுமை மாவு – 200 கிராம்
நெய் – 100 மில்லி
ஏலத்தூள் – சிறிதளவு
சீனி – 400 கிராம்
பால் – 200 மில்லி
முந்திரிபருப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
 
செய்முறை:
 
பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேக விடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரிபவுடர் சேர்த்து கிளறவும் சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வாபதம் வந்ததும் முந்திரிபருப்பு ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிவிடவும். இது சுவையாக இருக்கும் உடம்புக்கு சத்தானது.

jeudi 6 septembre 2012

ஆட்டுக் குடல் குழம்பு

 

                                ஆட்டுக் குடல் குழம்பு

தேவை:                                                                          
Photo : What is in your mind while seeing this?
Visit www.pagejaffna.com Right Now...ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.

பார்ஸி கோழிக்கறி

பார்ஸி கோழிக்கறி

Photo : தமிழ் -கருத்துக்களம்-
பழம் வேணுமா பழம்..  பழம் ?! :)தேவை:
கோ ழிக்கறித் துண்டுகள் – 1 கிலோ        
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 10 பல்
வரமிளகாய் – 10
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 1/2 கப்
பெ.வெங்காயம் – 2
தக்காளி கெச்சப் – 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து கோழிக்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும். இக் கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்

காளான் சாண்ட்விச்


                               காளான் சாண்ட்விச்

Photoதேவையான பொருட்கள்:-                                       
காளான் – 250 கிராம்
பூண்டு – 4 பல்
வெங்காயம் – 50 கிராம்
இஞ்சி – சிறுதுண்டு
மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரட்- 1 பாக்கெட்
எண்ணெய் – 100 மி.லி.
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
காளான், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ளவற்றுடன் பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தட்டிப் போட்டுச் சேர்த்து வதங்க விட வேண்டும்.
பின்பு சிறிது தண்ணீரைத் தெளித்து உப்பு, மசாலாத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் தடவி ரொட்டித் துண்டுகளை இருபுறமும் சூடாக்கிய பின் ரொட்டித் துண்டுகளுக்கிடையில் காளான் கறியை வைத்து உண்ணலாம்.

வறுத்த நண்டு



                                         வறுத்த நண்டு


தேவை:                                                                        
Photo
நண்டு – 5
இஞ்சி – 1 அங்குலம்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
மல்லி (தனியா) – 2 தேக்கரண்டி
தக்காளி – 1
சிகப்பு மிளகாய் – 10
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 3


செய்முறை:
நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். 10 சிகப்பு மிளகாய்கள், 1 அங்குலம் இஞ்சி, 1 தேக்கரண்டி சீரகம், 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, 2 தேக்கரண்டி மல்லி (தனியா) இவற்றை அரைத்துக் கொள்ளவும். 3 பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். 1 தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 10 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கி, வதங்கிய பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதித்தும் நண்டுகளைப் போடவும். நண்டுகள் வெந்து நன்கு வதங்கிய பின் இறக்கவும்.