Pages

mardi 19 janvier 2016

சென்னை சிக்கன் பிரியாணி

சென்னை சிக்கன் பிரியாணி


sama
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி-2 கப்
எலும்புள்ள சிக்கன்-½ கிலோ
இஞ்சி- சிறிய துண்டு
பூண்டு-5
பச்சை மிளகாய்- 2
எண்ணெய்- 2 மேஜைக்கரண்டி
நெய் – 2 மேஜைக்கரண்டி
கிராம்பு – 3-4
பட்டை – 1” துண்டு
பே லீஃப் – 2
நட்சத்திர சோம்பு–1
ஏலக்காய்– 2 – 3
வெங்காயம்- 2
புதினா, மல்லித் தளை -1 கப் (நறுக்கியது)
தக்காளி – 2
தயிர்-½ கப்
மஞ்சள் தூள்-சிறிது
உப்பு -தேவையான அளவு
ஊற வைக்க
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -சிறிது
மிளகாய் தூள்- ½தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு

செய்முறை
பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவி எடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எலுமிச்சை சாறு மஞ்சள் தூள் மிளகாய் தூள்உப்பு சேர்த்து ஊற வைக்கவும்.
இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்,
பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, பே லீஃப், நட்சத்திர சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்பு நறுக்கிய புதினா மற்றும் மல்லித் தளை சிறிது நிமிடம் வதக்கவும்.
பின்பு சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
பின்பு தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் வெளியேறும் வரை வைக்கவும்.
4 கப் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு சுவையை சரி பார்த்துக்கொள்ளவும். பின்பு பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்கு கிளறி பின்பு அதனை மூடி வைத்து மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வைக்கவும் பின்பு 5 – 7 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
பின்பு புதினா மற்றும் மல்லித் தளை தூவி இறக்கவும்.
இப்போது சிக்கன் பிரியாணி ரெடி,

உருளைகிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்

உருளைகிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்


தேவையான பொருட்கள் :
vfre
உருளைகிழங்கு – 2
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை – சிறிதளவு
முட்டை – 3
மிளகு பொடி – ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
* உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
* தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும்படி அடித்துக்கொள்ளவும்
* ஒரு நான் ஸ்டிக் பானில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை ஒரு லேயர் ஊற்றவும்.
* அதன் மேல் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை, சிறிது மிளகுதூள் தூவி அதன் மேல் இன்னொரு லேயர் முட்டையை ஊற்றவும்.
* மிதமான தீயில் மூடி போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும்.
* மறுபடியும் திருப்பி போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
* பொன்னிற ஃப்ரெஞ்ச் ஆம்லெட் நல்ல வாசனையோடு ரெடி.

ப்ரைட் கோழி பிரியாணி செய்வது எப்படி -

ப்ரைட் கோழி பிரியாணி செய்வது எப்படி -



தேவையான பொருட்கள்:-
Chicken_Biryani
கோழிக்கறி – முக்கால் கிலோ, பாசுமதி அரிசி – 600 கிராம், வெங்காயம் – 200 கிராம், தக்காளி – 200 கிராம், மசாலா – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா – முக்கால் ஸ்பூன் (ஏலம் பட்டை கிராம்புத்தூள்), மல்லி புதினா- தலா ஒரு கைபிடியளவு, எண்ணெய் – 150 மில்லி, நெய் – 50 மில்லி, எலுமிச்சை – 1, தயிர் – 1 டேபிள்ஸ்பூன், லெமன் யெல்லோ கலர் – பின்ச், உப்பு – தேவைக்கு….
செய்முறை:
கழுவிய கோழியுடன்  உப்பு, தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , சிக்கன் டிக்கா அல்லது சிக்கன் 65 மசாலா 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து கலந்து சிக்கனை ஊறவைக்கவும்.  நறுக்கவேண்டியவற்றை நறுக்கி வைக்கவும்.

கடாயில் 4 டேபிஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறிய கோழியை பொரித்து எண்ணையோடு வைக்கவும்.
பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் கலவை விட்டு காய்ந்ததும் வெங்காயம் முழுவதும் போட்டு வதக்கி, சிவந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மல்லி புதினா, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.


பின்பு தக்காளி ,உப்பு சேர்த்து சிறிது மசிந்ததும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிரட்டி சிம்மில் வைக்கவும். எண்ணெய் தெளிந்து மேலே வரும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிவந்ததும் ஊறிய அரிசி போட்டு முக்கால் பதத்தில் வெந்து வடித்து வைக்கவும்.
ரெடியான ஃப்ரைட் சிக்கனை பிரியாணி மசாலாவில் சேர்க்கவும். லெமனை பிழியவும், தேவைப்பாட்டால் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். கோழியை  சேர்த்த பின்பு , வடித்த சாதம் சேர்த்து சஃப்ரான் அல்லது லெமன் கலர் கரைத்து ஊற்றவும் .
அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி, அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைக்கவும். அடியில் பழைய தோசைக்கல் வைக்கவும்.  திறந்து ஒரு போல் பிரட்டி விடவும். சுவையான ஃப்ரைட் கோழி பிரியாணி ரெடி.
பிரியாணி தம் ஆனவுடன் ஒரு போல் நன்கு பிரட்டி அடியில் உள்ள சிக்கன், பிரியாணி மசாலாவும் கலந்த பின்பு பரிமாறவும்.
தயிர் சட்னியுடன் சூடாக பரிமாற சூப்பராக இருக்கும்.

இறால் பிரியாணி

இறால் பிரியாணி


இறால் பிரியாணிசூரிய காந்தி எண்ணை – 300 கி
இறால் – 500 கி
அரிசி (சீராக சம்பா) – 500 கி
பல்லாரி வெங்காயம் – 250 கி
தக்காளி – 200 கி
இஞ்சி, பூண்டு விழுது – 4 டீஸ்பூன்
வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – 150 கி
புதினா – 100 கி
மிளகாய் – 4
எலுமிச்சை – 1
தயிர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலம் – கொஞ்சம்
எப்படி செய்வது?
முதலில் இராலை தயிர் விட்டு உப்பு போட்டு கொஞ்சம் வத்தல் பொடி கலந்து பிசைந்து வைக்க வேண்டும். பின்னர் கடாயில் எண்ணையை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அடுத்து பல்லாரி, மிளகாய் இவைகளை போட வேண்டும். நன்றாக இவற்றை வதக்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை அதில் கலந்து நன்கு சிவப்பு கலர் வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் தக்காளியை போட்டு வதக்கி, அதில் இறால் கலவையை சேர்த்து, மஞ்சள், வத்தல், கொத்தமல்லி பொடிகளை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் 1 டம்ளர் அரிசிக்கு (சீராக சம்பா) 2 டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து கொத்தமல்லி இழை, புதினா, உப்பு ஆகியவற்றை போட்டு மூடி வைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பின்னர் திறந்து நன்றாக கிளறி விட வேண்டும். பின்னர் அதனை மூடி தம்பில் வைத்து இறக்க வேண்டும். சுவையான, சூடான இறால் பிரியாணியை அனைவருக்கும் பரிமாறலாம். இறால் பிரியாணி செய்ய 20 நிமிடங்கள் ஆகும்.

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்


தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை – தேவையான அளவு.
07-bengalgramsundal-600
செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்


தேவையான பொருட்கள்:
sdace
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/4 கப்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை டோஸ்ட் செய்ய வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கிளறி இறக்கினால், உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெடி!!!

சமையல் சமாளிப்புகள்

சமையல் சமாளிப்புகள்


Posted Image


இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் – சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.


“சொத சொத’வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.


தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும் 

செட்டிநாடு வத்தல் குழம்பு


செட்டிநாடு வத்தல் குழம்பு


தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம்
வெள்ளைப்பூண்டு – 100 கிராம்
சுண்டை வத்தல் – 10
தக்காளி – 2
புளி – எலுமிச்சையளவு
குழம்பு மிளகாய்த்தூள் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 /2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1 /2 தேக்கரண்டி
சீரகம்
– 1 /4 தேக்கரண்டி
மிளகு – 1 /4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது
கறிவேப்பிலை – 1 கொத்து
vaththa

செய்முறை:

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமாக அரிந்து கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியாக சிறிது எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை பொறித்து குழம்பில் கொட்டவும்.

உளுந்து போண்டா




உளுந்து போண்டா

தேவையானப் பொருள்கள்:
உளுந்து – ஒரு கப்
மிளகு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் – ஒரு துண்டு (சிறு சிறு பல்லாக நறுக்கிக்கொள்ளவும்)
பெருங்காயம் – துளி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
ddw
செய்முறை:
உளுந்தை தண்ணீரில் நனைத்து ஊறவைக்க வேண்டும். உடைத்த கறுப்பு உளுந்து மட்டுமே நன்றாக மாவு போன்று இருக்கும். வெள்ளை உளுந்து பயன்படுத்தினால் போண்டா அந்த அளவுக்கு மிருதுவாக இருக்காது.
உளுந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பிறகு தோல் இல்லாமல் கழுவ வேண்டும்.
பின்பு கொஞ்சம் நீரை விட்டு சிறிது நேரத்திற்கு மட்டும் குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
பின்பு உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு மைய அரைக்க வேண்டும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேல் அரைக்க வேண்டும்.
மாவைக் கையில் எடுத்தால் பஞ்சு போல் இலேசாக இருக்க வேண்டும். பின்பு மாவை வழித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அடித்து கொழப்ப வேண்டும். அப்போதுதான் மாவு அமுங்காமல் இருக்கும்.
இதனுடன் மிளகு, தேங்காய், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தண்ணீரைத் தொட்டுக்கொண்டு மாவை ஒரு பெரிய கோலி அளவிற்கு உருட்டி எண்ணெயில் போட வேண்டும்.
ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுத்துவிட வேண்டும். இதே போல் எல்லாவற்றையும் செய்து எடுத்து வைக்க வேண்டும்.
இது மேலே நல்ல மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
சூடான உளுந்து போண்டா தயார். இதற்கு தொட்டுக்கொள்ளத் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். வெண்பொங்கல் மற்றும் சாம்பார் செய்வதாக இருந்தால் கூடவே போண்டா மற்றும் தேங்காய் சட்னியும் செய்தால் நல்ல பொருத்தமாக இருக்கும்.
மருத்துவக் குணங்கள்:
உளுந்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ் ஆகியவைகள் அதிகம் காணப்படுகின்றன.
உளுந்தில் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது.
மேலும் இவற்றில் வைட்டமின் “சி” அதிகம் நிறைந்துள்ளது.
உளுந்து எலும்பு மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத்தும் வாய்ந்தது.
நீரழிவு நோய் மற்றும் வாதநோயைக் கட்டுப்படுத்த வல்லது.
இவற்றை உண்பதால் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உடலில் சேருகிறது. இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எனவே “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உணர்ந்து நோயின்றி வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.