காளான் சாண்ட்விச்

காளான் – 250 கிராம்
பூண்டு – 4 பல்
வெங்காயம் – 50 கிராம்
இஞ்சி – சிறுதுண்டு
மசாலாத்தூள் – அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பிரட்- 1 பாக்கெட்
எண்ணெய் – 100 மி.லி.
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
காளான், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றிக் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளித்ததும் அத்துடன் நறுக்கி வைத்துள்ளவற்றுடன் பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தட்டிப் போட்டுச் சேர்த்து வதங்க விட வேண்டும்.
பின்பு சிறிது தண்ணீரைத் தெளித்து உப்பு, மசாலாத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கி வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் தடவி ரொட்டித் துண்டுகளை இருபுறமும் சூடாக்கிய பின் ரொட்டித் துண்டுகளுக்கிடையில் காளான் கறியை வைத்து உண்ணலாம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire