- மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
- இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக விடவும்.
- தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- மாம்பழம் சாஃப்டானதும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் தயிரை அடித்து இதில் கலந்து விடவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாம்பழ கலவையில் சேர்க்கவும்.
- எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire