- உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை, உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- சீரகம், பூண்டு இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பருப்பு அரைபட்டால் போதும். இட்லிக்கு அரைப்பது போல அரைக்க வேண்டாம்.
- ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பருப்பு, சீரகம் பூண்டு விழுது, அரைத்த வெந்தயம், உருவிய கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
- ஒரு ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, வெயிலில் நன்றாகக் காய விடவும்.
- ஈரப் பதம் இல்லாமல் 2-3 நாட்கள் காய்ந்ததும், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- தேவைப்படும்போது, காய்ந்த எண்ணெயில் இந்த வடகங்களைப் போட்டு, பொரித்துக் கொள்ளலாம்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
lundi 23 avril 2012
வெங்காய வடகம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire