Pages

vendredi 25 mai 2012

கொத்தவரங்காய் கறி

  • 1. கொத்தவரை - 2 கப்
  • 2. உருளை - 1
  • 3. வெங்காயம் - 1
  • 4. தக்காளி - சில துண்டுகள்
  • 5. பச்சை மிளகாய் - 1
  • 6. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • 7. தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • 8. மஞ்சள் தூள் - சிறிது
  • 9. கரம் மசாலா - சிறிது
  • 10. அம்சூர் பொடி - சிறிது
  • 11. உப்பு
  • 12. சீரகம், எண்ணெய் - தாளிக்க
    • உருளை தோல் நீக்கி நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தவரை நார் எடுத்து பொடியாக நறுக்கவும்.
    • எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    • பின் தக்காளி சேர்த்து வதக்கி, காய்கள் சேர்க்கவும்.
    • காய் நீர் இல்லாமல் மூடி வேக விட்டு சற்று கலர் மாற துவங்கியதும் தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும் (அம்சூர் பொடி தவிற)
    • பின் நீர் விட்டு மூடி வேக விடவும்.
    • காய்கள் வெந்து நீர் இல்லாமல் வந்ததும் அம்சூர் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும். சாத வகைகளுக்கு நல்ல காம்பினேஷன். ரொட்டிக்கு நன்றாக இருக்கும்.

    Note:

    அம்சூர் (Dry Mango Powder) பொடி சேர்ப்பதால் தக்காளி அளவு சில சிறு துண்டுகளே போதுமானது. இது நீர் இல்லாமல் செய்ய வேண்டிய கறிவகை.

    Aucun commentaire:

    Enregistrer un commentaire