Pages

jeudi 18 octobre 2012

அவல் பொங்கல் செஞ்சு பாருங்க…

இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…. அவல் பொங்கல் செஞ்சு பாருங்க… வித்தியாசமான சுவையுடன் பிரமாதமாக இருக்கும்……..
 
தேவையான பொருட்கள்:
அவல் – 1/2 கிலோ                                                                  
வெல்லம் – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 150 கிராம்
ஏலக்காய் – 6
கிஸ்மிஸ் பழம் – 20
தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் – 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது – 1 கப்
நெய் – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
 
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire