- பச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, மாவு மிஷினில் கொடுத்து, மாவாகத் திரித்து, வைத்துக் கொள்ளவும்.
- இதுதான் களி மாவு.
- திரித்த மாவில் இருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- கருப்பட்டியை, தூளாகத் தட்டி, ஒன்றரை முதல் இரண்டு கப் வரை எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கருப்பட்டித் தூளை அதில் போட்டு, கரைய விடவும்.
- கரைந்தால் போதும், பாகு வைக்க வேண்டாம்.
- சிறிது ஆறியதும், கருப்பட்டி தண்ணீரை, வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும்.
- குக்கருக்குள் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில், இந்தத் தண்ணீரை ஊற்றவும்.
- இதில், களி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கரைக்கவும்.
- அரை கப் நல்லெண்ணெயையும் இதில் ஊற்றி, கலந்து கொள்ளவும்.
- குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி, 3 - 4 விசில் வர விடவும்.
- ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து, பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
- ஒரு மரக் கரண்டியால், நன்றாகக் கிளறவும்.
- தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, தொட்டுப் பார்த்தால், அதிகம் ஒட்டாமல், வெந்திருக்க வேண்டும்.
- கை பொறுக்கும் சூடு ஆனதும், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, ஆரஞ்சுப் பழ அளவுக்கு, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- பரிமாறும்போது, ஒரு கிண்ணத்தில், ஒரு உருண்டை வைத்து, அதன் நடுவில், கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி, நெய்யைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 30 mars 2012
உளுத்தங்களி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire