Pages

jeudi 1 novembre 2012

பூரி + உருளை கிழங்கு குருமா






தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
மைதா மாவு -சிறிதளவு
சீரக பொடி – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடலை எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடலை எண்ணெய் – 1/2 லிட்டர்.. (பொரிப்பதற்கு.)
வெதுவெதுப்பான நீர் – மாவு பிசைவதற்கு.
செய்முறை:
கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும். பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய் படுமாறு தடவவும்.ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும். எண்ணையை வாணலில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அப்பளம் போன்று வட்டவடிவு வருமாறு…தேய்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள வட்ட வடிவான மாவு உருண்டைகளை.. போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும். ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்..இரு பக்கங்களும் சிவந்ததும் அதை எடுக்கவும்… சுவையான பூரி தயார்.இப்படி ஒவ்வென்றாக …தேவையான அளவிற்கு சுட்டு வைத்து கொள்ளவும்..பூ‌‌ரி ந‌ன்றாக உ‌ப்‌பி வர வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், பூ‌ரி மா‌வி‌ல் வறு‌த்த ரவையை சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.
+
உருளை கிழங்கு குருமா..
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய்- 8
தக்காளி – 2
பூண்டு – 1
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்து – 1 ஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
கருவேப்பிலை- கொஞ்சம்
எண்ணை – சிறிதளவு
செய்யும் முறை:
முதலில் உருளை கிழங்கை வேகவைத்து உரித்து வைத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பூண்டு உரித்தது ஆகியவற்றை பச்சை மிளகாய் நைசாக நறுக்கிவைத்து கொள்ளவும் ..வாணலில் சிறிது எண்ணையை விட்டு காய்ந்தாவுடன் கடுகு உளூந்து சோம்பு கருவேப்பிலை போட்டு தாளித்து சிவந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பூண்டு மஞ்சள் தூள் இவற்றை போட்டு வதக்கவும் .. நன்றாக வதங்கியவுடன் .. உரித்த உருளையை கையால் பிசைந்தவாறே வாணலில் போடவும். பிறகு சிறிது நீர் விட்டு கொதிக்கவிடவும் … அடிபிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.. பததிற்கு வந்த வுடன் இறக்கவும்..
சுவையான பூரி + உருளை கிழங்கு குருமா தயார்..

Aucun commentaire:

Enregistrer un commentaire