கடலைப்பருப்பு - ஒரு சுண்டு
பெருஞ்சீரகம்(fennel) - (1- 2) மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - ஒன்று
பச்சைமிளகாய் (சிறியதுண்டுகளாக நறுக்கியது) - 4
கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு
உள்ளி(பூண்டு) (நசுக்கியது) - 2 பல்
இஞ்சி(நசுக்கியது) - சிறியதுண்டு
எண்ணெய் - தேவையான அளவு
கொதிதண்ணீர் (நகச்சூடு) - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
- ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பை போட்டு அதன் மேல் ஒரளவு கொதித்த நீரை (நகச்சூடு)விடவும் (கடலைப் பருப்பை விட தண்ணீர் கூடுதலாக இருக்கவேண்டும்).
- பின்பு அதை( 1 - 2)மணி நேரம் ஊறவிடவும். கடலைப்பருப்பு ஊறியபின்பு கடலைப்பருப்பில் உள்ள தண்ணீரை வடித்து விடவும்.
- தண்ணீர் வடித்து விட்ட பின்புகடலைப்பருப்பை எடுத்து மூன்றாக பிரித்து மூன்று பாத்திரத்தில் போடவும்(முதலாவது பாத்திரத்தில் கொஞ்சமாகவும், இரண்டாவது மூன்றாவது ஆகிய பாத்திரங்களில் முதலாவதின் இரண்டு மடங்காகவும்).
- இரண்டாவது பாத்திரத்தில் உள்ள கடலைப்பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில் (மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும் (நன்றாக அரைக்ககூடாது)(அதிகளவு தண்ணீர் சேர்க்ககூடாது).
- அரைத்த கடலைப்பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அதன் பின்பு மூன்றாவது பாத்திரத்தில் உள்ள கடலைப் பருப்பை எடுத்து அதனை கிரைண்டரில்(மிக்ஸியில்) அல்லது ஆட்டுகல்லில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்)(தடிப்பான பசை போல).
- பின்பு அதனுடன் உப்பைசேர்த்து அரைக்கவும் சேர்த்து அரைக்காவிட்டால் உப்பு நன்றாக கலக்காது).
- அதன் பின்பு மூன்றாவதாக அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் போடவும். பின்பு மூன்றாவதாக அரைத்த கடலைப்பருப்பு உள்ள பாத்திரத்தில் அதனுடன் இரண்டாவதாக அரைத்த கடலை பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.
- கலந்த பின்பு அதனுடன் முதலாவதாக எடுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்டு நன்றாக கலக்கவும்.
- இவையாவற்றையும் நன்றாக கலந்தபின்பு இதனுடன் சிறியசிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, (நசுக்கிய)உள்ளி(பூண்டு),(நசுக்கிய)இஞ்சி, பெருஞ்சீரகம்(fennel), கடுகு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
- கலந்தபின்பு அடுப்பில்தாட்சியை(வாணலியை)வைத்து அதில் அரைவாசிக்கு எண்ணெய்விட்டு நன்றாக கொதிக்கவிடவும்.
- அரைத்து கலந்து வைத்திருக்கும் மாவை கொஞ்சம் கையில் எடுத்து அதை ஓரளவு உருண்டையாக்கி அதை கையின் நடுப்பகுதியில் வைத்து ஓரளவு தட்டவும்.
- கொதித்த எண்ணெயில் செய்த வடையை போடவும் இதே போல் கொஞ்ச வடைகளை செய்து போட்டு ஓரளவு மஞ்சள் நிறமாக பொரிக்கவும்.
- பொரிந்த வடைகளில் உள்ள எண்ணெயை வடித்து விட்டு அதை சூட்டுடன் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் மூடிவைக்கவும்(வடையின் உட்பகுதி நன்றாக அவிவதற்காக அப்படி செய்யாவிட்டால் வடையின் உட்பகுதி நன்றாக அவியாது).
- அதன் பின்பு அதை எடுத்து திரும்பவும் கொதித்த எண்ணெயில் போட்டு நல்ல பொன்னிறமாக பொரிக்கவும்.
- அதன் பின்பு வடைகளில் உள்ள எண்ணெயை வடித்துவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
- அதன் பின்பு சத்தான சுவையான இலங்கை கடலை வடை தயாராகிவிடும்.
- பின்பு அதை எடுத்து ஒருசிறிய தட்டில் வைத்து சட்னியுடன் அல்லது துவையலுடன் பரிமாறவும்.