Pages

vendredi 1 février 2013

கோதுமை மாவு குழிப்பணியாரம்




Photo : Wonderful fruit art .... Feel free to share, like, tag n comment 
GreenYatra
  • ரவை - அரை கப்                                                     
  • பால் - கால் கப்
  • உப்பு - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • சீனி (சர்க்கரை) - அரை கப்
  • கோதுமைமா (மைதாமா) - ஒரு கப்
  • ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
  • தேங்காய்ப்பூ - அரை கப்
  • வறுத்த கஜூ(முந்திரி பருப்பு) - 10
  • எண்ணெய் - தேவையான அளவு
    • அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து ரவையை லேசாக வறுக்கவும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போடவும்.
    • பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) கோதுமைமாவு(மைதாமா), பால், தண்ணீர், சீனி(சர்க்கரை) ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்து கரைக்கவும்.
    • கரைத்த பின்பு ரவை போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தில் இக்கலவையை ஊற்றி இதனுடன் ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பூ, வறுத்த கயூ(முந்திரி பருப்பு) ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
    • பின்பு அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து அதில் இக்கலவையை ஊற்றி அதனுடன் எண்ணெய் ஊற்றி நன்றாக வேகவிடவும்.
    • வெந்தபின்பு சுவையான சத்தான கோதுமைமா குழிப்பணியாரம் தயாராகிவிடும். ஒரு தட்டில் தயாரான கோதுமை மாவு குழிப்பணியாரத்தை வைத்து பரிமாறவும்.

    திடீர் விருந்தினர்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக மிக விரைவாக செய்து கொடுப்பதற்கு இலகுவானதும் சுவையானதும் கால்சியம், புரதம், கொழுப்பு, மாப்பொருள் போன்ற பல சத்துகள் அடங்கியதுமான சிற்றுண்டியே கோதுமைமாவு குழிப்பணியாரம் ஆகும். இதன் சுவையை அறிய இதனை செய்து சுவைத்து அறியவும். எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர், இருதயநோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - சீனி(சர்க்கரை) பதிலாக வெல்லம் சேர்க்கலாம், கோதுமைமா(மைதாமா)பதிலாக ஆட்டாமா (கோதுமைமா) சேர்க்கலாம்.


     

    Aucun commentaire:

    Enregistrer un commentaire