கருணைக்கிழங்கு மசியல்
- முதலில் கருணைகிழங்கை நன்கு அவித்து தோலை நீக்கி கையால் மசித்துக்கொள்ளவும்.
- பின் கிழங்கில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும்.
- பின் புளியை கெட்டியாக கரைத்து அதையும் கிழங்குடன் சேர்க்கவும்.பின்பு அதில் உப்பு, மசாலாதூள்,மஞ்சள்தூள்,ஆகியவற்றை சேர்த்து பிசைந்துவைக்கவும்.
- பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம்
- போட்டு பொரிந்ததும் பாதி எண்ணெய்யை கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- பின் மீதி உள்ள எண்ணெய்யில் கருவேப்பிலை, இராலையும் போட்டு வதக்கவும்.
- பின் பிசைந்து வைத்த கிழங்கை சேர்த்து கிளறி தீயை லேசாக வைத்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித பிறகு தேங்காய் விழுதை சேர்த்து கிளறி சிறிது நேரம் தணலில் வைத்து கிண்ணத்தில் எடுத்து வைத்த எண்ணெய்யை ஊற்றி இறக்கவும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire