முருங்கைப்பூ - 2 கைப்பிடி
- முருங்கைப்பூவை அலசி,சுத்தப் படுத்திக் கொள்ளவும்.கடலைப்பருப்பு மற்றும் பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
- கடாயில், எண்ணெய் ஊற்றி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்,தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.இதனுடன் முருங்கைப்பூ சேர்த்து,மஞ்சள்தூள், மிளகாய்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
- முருங்கைப்பூ வெந்ததும்,அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.பின், தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்த்ததும்,இறக்கி விடவும்.
- சுவையான முருங்கைப்பூ கூட்டு தயார். இது தோசை,சப்பாத்தி,சாதத்துடன் நன்றாக இருக்கும்.