- கடலைப்பருப்ப சுத்தம் செய்து குக்கரில் வேக விடவும்.
- ஏற்கனவே வேகவைத்து தோலுரித்துவைத்திருக்கும் பலாக்கொட்டைகளையும் சேர்த்து கொதிக்கவிடவும்மஞ்சப்பொடி சேர்க்கவும்.
- நன்கு வெந்ததும் புளியைக்கரைத்துவிட்டு புளிவாசம் போகக்கொதிக்க விட்டு இறக்கவும் உப்பு சேர்க்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகாவத்தல் பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து சூடாகப்பரிமாறவும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 25 mai 2012
பலாக்கொட்டை புளிக்கூட்டு
கொத்தவரங்காய் கறி
- உருளை தோல் நீக்கி நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி பொடியாக நறுக்கவும். கொத்தவரை நார் எடுத்து பொடியாக நறுக்கவும்.
- எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கி, காய்கள் சேர்க்கவும்.
- காய் நீர் இல்லாமல் மூடி வேக விட்டு சற்று கலர் மாற துவங்கியதும் தூள் எல்லாம் சேர்த்து பிரட்டவும் (அம்சூர் பொடி தவிற)
- பின் நீர் விட்டு மூடி வேக விடவும்.
- காய்கள் வெந்து நீர் இல்லாமல் வந்ததும் அம்சூர் பொடி சேர்த்து பிரட்டி எடுக்கவும். சாத வகைகளுக்கு நல்ல காம்பினேஷன். ரொட்டிக்கு நன்றாக இருக்கும்.
Note:
அம்சூர் (Dry Mango Powder) பொடி சேர்ப்பதால் தக்காளி அளவு சில சிறு துண்டுகளே போதுமானது. இது நீர் இல்லாமல் செய்ய வேண்டிய கறிவகை.mercredi 2 mai 2012
தக்காளி கருணைக்கிழங்கு மசியல்
- தக்காளி - 2
- கருணைக்கிழங்கு - 3
- பெரிய வெங்காயம் - 1
- மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- கருவேப்பிலை, பச்சை கொத்துமல்லி - 1 கைப்பிடி அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- நல்லெண்ணெய்/ரீஃபைண்ட் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
- தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
- கருணைக்கிழங்கை, குக்கரில் குழைவாக வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
- வெந்த கிழங்கை, தோல் உரித்து, மசித்து வைக்கவும்.
- தக்காளியை சிறு துண்டுகளாக்கி, இஞ்சி, கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து,1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
- இதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, வதக்கவும்.
- வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, பெருங்காயப் பவுடர் சேர்த்து, 1 நிமிடத்துக்குக் கிளறவும்.
- பின் அரைத்த தக்காளி விழுதை, இதில் ஊற்றி, மிதமான தீயில், 1 நிமிடம் கிளறவும்.
- பிறகு மசித்த கருணைக்கிழங்கையும் உப்பையும் இதில் சேர்த்து, தீயைக் குறைவாக வைத்து, நன்றாகக் கிளறவும்.
- மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை, கொஞ்சம் கொஞ்சமாக, சேர்த்துக் கிளறவும்.
- சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார்.
- ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.
கோதுமை ரவை இட்லி
கோதுமை ரவை இட்லி
தேவையானபொருட்கள்
கோதுமைரவை-1கப்
கடலைப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர்-1கப்
எண்ணெய்-1டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி-சிறிது
மிளகு-1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
புளித்த தயிர்-1கப்
எண்ணெய்-1டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி-சிறிது
மிளகு-1/4டீஸ்பூன்
செய்முறை
பச்சைமிளகாய்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமைரவையையும்,கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு,மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புளித்ததயிர்,எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சுடாகப் பரிமாறவும்.
Inscription à :
Articles (Atom)