- உருளைகிழங்கை வேகவைத்து பெரியதுண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
- வாணலியில் 1ஸ்பூன் எண்ணை ஊற்றி வறுத்து அரைக்க குடுத்தவற்றை வதக்கி அரைக்கவும்.
- புளியை கரைத்துவைக்கவும்.
- குழம்புவைக்கும் பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க குடுத்தவற்றை தாளித்து அரைத்தவிழுது போட்டு மஞ்சள்பொடி,புளிக்கரைசல்,உப்பு,வேகவைத்த உருளைகிழங்கு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- குழம்பு சற்று திக்காக ஆனவுடன் கொத்தமல்லிதூவி இறக்கவும்.
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 27 avril 2012
உருளை காரகுழம்பு
பனீர் பட்டாணி குருமா
- பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
- பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
- இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
- சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
- நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.
lundi 23 avril 2012
வெங்காய வடகம்
- உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- சின்ன வெங்காயத்தை, உரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- சீரகம், பூண்டு இரண்டையும் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பருப்பு அரைபட்டால் போதும். இட்லிக்கு அரைப்பது போல அரைக்க வேண்டாம்.
- ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, உப்பு, அரைத்த பருப்பு, சீரகம் பூண்டு விழுது, அரைத்த வெந்தயம், உருவிய கருவேப்பிலை எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, பிசைந்து கொள்ளவும்.
- ஒரு ப்ளாஸ்டிக் ஷீட் விரித்து, அதில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, வெயிலில் நன்றாகக் காய விடவும்.
- ஈரப் பதம் இல்லாமல் 2-3 நாட்கள் காய்ந்ததும், டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- தேவைப்படும்போது, காய்ந்த எண்ணெயில் இந்த வடகங்களைப் போட்டு, பொரித்துக் கொள்ளலாம்.
வடகம் உருட்டிக் காய வைக்கும்போது, கிள்ளினாற்போல வைக்கவும். ரொம்பவும் உருட்டி, இறுக்கமான உருண்டைகளாக வைத்தால், மேற்புறம் காய்ந்தாலும், உள்ளே ஈரப் பதம் இருக்கும். அப்படி இருந்தால், ஒரு வருடத்துக்கு வைத்திருக்கும்போது, வண்டு வர வாய்ப்பு உண்டு. நன்றாகக் காய வைத்து எடுத்தால், ஒரு வருடம் வரை கெடாது.இந்த வடகத்தைப் பொரித்து, புளிக் குழம்பு, மோர்க் குழம்பு, கூட்டாஞ்சோறு இவற்றில் சேர்க்கலாம். சுவை கூடும்.
dimanche 15 avril 2012
சுக்கா சிக்கன்
சுக்கா சிக்கன்
தேவை:
கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 1
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
கறிமசால்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 கப்
எண்ணெய் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
கோழிக்கறி – 1 கிலோ (சிறியதாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 1
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தனியாதூள் – 1 டேபிள் ஸ்பூன்
சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
கறிமசால்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 கப்
எண்ணெய் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறியை வறுத்து எடுக்கவும். மீதம் இருக்கும் எண்ணெயில் நறுக்கிய பெரிய வெங்காயம் அரைத்த இஞ்சி, பூண்டு, இரண்டாக நறுக்கி ப.மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
mercredi 11 avril 2012
ஆட்டுக் குடல் குழம்பு
ஆட்டுக் குடல் குழம்பு
ஆட்டுக்குடல் – 1
மல்லி – 2 தேக்கரண்டி
வெங்காயம் அறுத்தது – 1 கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் வற்றல் – 6
சீரகம் – 3 தேக்கரண்டி
இஞ்சி – 1 சிறு துண்டு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
மூன்று கப் தண்ணீரிவ் இஞ்சி சேர்த்து குடலைப்போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். வத்தல், சீரகம், மல்லியை அரைத்து வெங்காயம் உப்பு கலந்து வேகும் குடலில் குழம்பு நன்கு கொதித்து குடல் வெந்ததும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு பொறித்துக் குழம்பில் ஊற்றி இறக்கவும்.
dimanche 8 avril 2012
Inscription à :
Articles (Atom)