Pages

mercredi 14 mai 2014

செட்டிநாடு நண்டு வறுவல்

images

தேவையான பொருட்கள் 
  • நண்டு – 5
  • பெரிய வெங்காயம் – 2
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1 அங்குலத் துண்டு
  • தக்காளி – 1
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • சிகப்பு மிளகாய் – 10
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தனியா – 2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  5. இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்
  7. நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.
(செட்டிநாடு முறையில் சுவையான நண்டு வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.)

Aucun commentaire:

Enregistrer un commentaire