- புளியை ஊற வைத்து பின் கரைத்துக்கொள்ளவும்.அதில் புளிகுழம்பு பொடியை சேர்க்கவும்
- கத்திரிக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.கீரையை அரிந்து சுத்தம் செய்துக்கொள்ளவும்
- கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்
- பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- தக்காளி சேர்த்து வதங்கியதும் கீரையை சேர்க்கவும்
- கீரை சுருண்டதும் புளிகரைசல்,கத்திரிக்காய்,உப்பு சேர்த்து வாசனை போக கொதிக்கவிடவும்
- கீரை குழம்பு தயார்
சமையலில் அனுபவம் இல்லாதவர்கள்கூட மிக எளிமையாய் சமைக்கும் வண்ணம் இந்த குறிப்புகள் இருக்கும். Recipes in Tamil
vendredi 30 mars 2012
கீரை குழம்பு
உளுத்தங்களி
- பச்சரிசியையும், தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, மாவு மிஷினில் கொடுத்து, மாவாகத் திரித்து, வைத்துக் கொள்ளவும்.
- இதுதான் களி மாவு.
- திரித்த மாவில் இருந்து ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
- கருப்பட்டியை, தூளாகத் தட்டி, ஒன்றரை முதல் இரண்டு கப் வரை எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் 2 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, கருப்பட்டித் தூளை அதில் போட்டு, கரைய விடவும்.
- கரைந்தால் போதும், பாகு வைக்க வேண்டாம்.
- சிறிது ஆறியதும், கருப்பட்டி தண்ணீரை, வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும்.
- குக்கருக்குள் வைக்கக் கூடிய ஒரு பாத்திரத்தில், இந்தத் தண்ணீரை ஊற்றவும்.
- இதில், களி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கரைக்கவும்.
- அரை கப் நல்லெண்ணெயையும் இதில் ஊற்றி, கலந்து கொள்ளவும்.
- குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைத்து, மூடி, 3 - 4 விசில் வர விடவும்.
- ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து, பாத்திரத்தை வெளியே எடுக்கவும்.
- ஒரு மரக் கரண்டியால், நன்றாகக் கிளறவும்.
- தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, தொட்டுப் பார்த்தால், அதிகம் ஒட்டாமல், வெந்திருக்க வேண்டும்.
- கை பொறுக்கும் சூடு ஆனதும், கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு, ஆரஞ்சுப் பழ அளவுக்கு, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- பரிமாறும்போது, ஒரு கிண்ணத்தில், ஒரு உருண்டை வைத்து, அதன் நடுவில், கட்டை விரலால் சிறிய பள்ளம் செய்து, அதில் உருக்கிய நெய் ஊற்றி, நெய்யைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
பருவம் அடைந்த பெண்களுக்கு, அத்தை, மாமி முறையுள்ளவர்கள் களி செய்து கொண்டு வந்து தருவார்கள். உளுந்து இடுப்பு எலும்பைப் பலப்படுத்தும். கருப்பட்டி, நல்லெண்ணெய், நெய், குளிர்ச்சியையும் உடலுக்கு வலுவையும் கூட்டும். மாதமொரு முறை, இந்தக் களியை செய்து, சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகளைப் பலப்படுத்தி, உடலை வலுவாக்கும். இனிப்புப் பொருட்களில், அஸ்கா எனப்படும் சர்க்கரை, மண்டை வெல்லம், அச்சு வெல்லம், பனங்கற்கண்டு, வட்டு கருப்பட்டி என்று பல விதங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு நிறம்.உளுத்தங்களிக்கு வட்டுக் கருப்பட்டிதான் நன்றாக இருக்கும்.
dimanche 11 mars 2012
கத்தரிக்காய் குழம்பு
கத்தரிக்காய் - 1/4 கிலோ
- கத்தரிக்காயை நீளவாட்டில் வெட்டி வைக்கவும். வெங்காய, பூண்டு நறுக்கி வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
- முந்திரியை ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- புளியை 1/2 கப் நீர் விட்டு கரைத்து வைக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.
- கத்தரிக்காய் நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- இதில் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது நீர் விட்டு மூடி தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
- பின் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய் முந்திரி கலவை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.
jeudi 1 mars 2012
ஆட்டு நுரையீரல் கூட்டு
தேவை:
ஆட்டு நுரையீரல் – 1
கடலை பருப்பு – 150 கிராம்
மிளகாய்தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கசகசா, சீரகம் – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
தேங்காய் – 1/4 முடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
நுரையீரலை சுத்தம் செய்து நடுத்தர சைஸ்க்கு நறுக்கிக் கொள்ளவும். இதை லேசாக உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். கசகசா, சீரகம், தேங்காய் இவைகளை நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, தேங்காய் விழுதை போட்டு வதக்கி, மிளகாய், தனியா, மஞ்சள்தூள் சேர்த்து கிளறி 5 நிமிடம் கொதிக்க விடவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பின்பு வேக வைத்த நுரையீரல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து ஒரு கொதியில் இறக்கி விடவும. கூட்டு கெட்டியாக இருக்க வேண்டும்.
முந்திரி பருப்பு பகோடா
தேவை:
முந்திரி – 250 கிராம்
கடலை மாவு – 1 கிலோ
வனஸ்பதி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 250 கிராம்
அரிசி மாவு – 150 கிராம்
ப. மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வனஸ்பதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு இவற்றை போட்டு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.
Inscription à :
Articles (Atom)