Pages

mercredi 22 avril 2015

சுவையான சமோசா




சுவையான சமோசா

தேவையான பொருட்கள்: 

இறைச்சி குழம்பு செய்ய:

மாட்டு இறைச்சி அரைக்கிலோ (கொத்து இறைச்சி/கீமா/கைமா)
உருளைக்கிழங்கு 4
பச்சை மிளகாய் 3 சிறிதாய் நறுக்கியது
பெரிய வெங்காயம் 2 சிறிதாய் நறுக்கியது
கறிமசாலா 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி 1 தேக்கரண்டி
மிளகாய் பொடி தேவையான அளவு
நச்சீரகம் பெருஞ்சீரகம் பொடி தலா 1 தேக்கரண்டி
ஏலக்காய் 2
கருவாப்பட்டை 2
பூண்டு 3 சிறிதாய் நறுக்கியது
கறிவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் பொரிக்கவும் தாளிக்கவும்
சமோசா செய்ய:

மைதா மாவு 3 தேக்கரண்டி
சமோசா பட்டி(wrap) (கடைகளில் கிடைக்கும், கிடைக்காதவர்கள் தனியாக மைதா மாவு வைத்துக்கொள்ளவும்)

தயார் செய்யும் முறை: 

இறைச்சியை நன்றாக கழுலி, எலும்புகள் இல்லாமல் சதைகளை மட்டும் எடுத்து சுத்தப்படுத்தி சிறிது உப்பு மஞ்சள் இட்டு வைத்துக்கொள்ளவும். 

மூன்று தேக்கரண்டி மாவை தனியாக அளவாக நீர் விட்டு தேசை மாவு பக்குவத்திற்கு கலக்கி தனியாக வைத்திருக்கவும். (சமோசா உறையை நாமாக செய்தால் இது தேவையில்லை)


உருளை கிழங்கை கழுவிவிட்டு நன்றாக அவித்து தோலுரித்து, அதை மசித்து வைத்துக்கொள்ளவும். 
வாணலியில் எண்ணைய் 3 மேசைக்கரண்டி விட்டு சூடானதும் ஏலக்காய் கருவாப்பட்டை போட்டு அது பொரிந்ததும் 



இறைச்சியை போட்டு நன்றாக கிளற வேண்டும். 
அதோடு இஞ்சி பூண்டு அரைத்ததை போட்டு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடவும்
இதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறவும்.

அத்துடன் பச்சை மிளகாய், கறிமசாலா மல்லி பொடி மிளகாய் பொடி தேவையான அளவு போட்டு கிளறிவிடவும்.

கடைசியாக வெங்காயம் போட்டு நன்றாக வதங்கி நீர் வற்றியதும் இறக்கி தனியாக வைக்கவும்


சமோசா பட்டி வாங்கக்கிடைக்காதவர்கள், மைதாமாவில் சிறிது வெந்நீர், தேவையான உப்பு, சீரகம் போட்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசையவும். 
பின்பு மாவை சிறு சிறு உருண்டையாக பிடித்து வைக்கவும். 
இவற்றை சப்பாத்தி போல உருட்டி எடுத்து அவற்றை கத்தி மூலம் இரு பாகமாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். 



சமோசா உறையில் தேவையான அளவு இறைச்சி கலவையை ஒரு மூலையில் வைத்து முக்கோணமாய் சுற்றவும்.

சுற்றி முடிந்ததும் கடைசியில் சமோசாவின் மூலைகளை குழைத்த மாவால் ஒட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். சமோசா பட்டியை நாமாக செய்திருந்தால் அதே மாவிலேயே ஒட்டிவிடலாம்.

பின்பு இவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும். 
சுவையான சமோசா தயார். 

Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங்







Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங்




தேவையான பொருட்கள்: 
மஞ்சள் முட்டைக் கரு 5.
சீனி 100 கிறாம் .
100 வீதம் கிறீம் பால் 50 cl.
வனிலா பிஃளேவர் 1 தேக்கரண்டி .
பழுப்புச் சீனி ( மண்ணிற சீனி ) தேவையான அளவு .
தயார் செய்யும் முறை: 

கோமகன் செஃப் Chéf இன் பக்குவம் 04 ( Crème brûlée , எரியூட்டிய கறமல் புடிங் )

நான் ஆரம்பகாலங்களில் உணவகத்தில் உதவி சமயல்காறராக வேலை செய்த பொழுது எனது செஃப் மூலம் கற்றுக் கொண்டது . இனிப்பு பதார்த்த வகையைச் சேர்ந்த இந்தப் பதார்த்தம் செய்வதற்கு மிகவும் இலகுவனது . சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டதன் பின்பு விரும்பி இதைச் சாப்பிடுவார்கள் .
பக்குவம் :

ஒரு பெரிய கிண்ணத்தில் முட்டை மஞ்சள்க் கருவையும் சீனியையும் நன்றாக நுரை வரும் வரை அடியுங்கள் .
பின்பு பாலை சிறிது சிறிதாகக் கலக்கி நன்றாக அடியுங்கள் . வனிலா பிஃளேவர்ரையும் சேர்த்து நன்றாக அடியுங்கள் .
வெதுப்பியில் (oven ) வைக்கக் கூடிய கிண்ணங்களில் அடித்த கறமல் புடிங் கலவையை ஊற்றுங்கள் .
வெதுப்பியில் 100 பாகை சென்ரிகிறேட்டில் சிறிது நிமிடங்கள் வெதுப்பி சூடாக விடுங்கள் .
பின்னர் கறமல் புடிங் கலவை ஊற்றிய கிண்ணங்களை வெதுப்பியில் வைத்து ஒரு மணித்தியிலாம் வரை விடுங்கள் .
இப்பொழுது கறமல் புடிங் தயார் .
கறமல் புடிங் ஐ வெளியே எடுத்து ஓர் அகன்ற தட்டில் கிண்ணங்களை வைத்து குளிர் தண்ணீர் சுற்ரிவர ஊற்றி விடுங்கள் .
சிறிது நேரத்தின் பின்னர் கறமல் புடிங் குளிர்ந்து விடும் . மேலும் கறமல் புடிங் ஐ குளிரப்பண்ண குளிரூட்டியில் ஏறத்தாள 2 மணித்தியாலங்கள் வைத்து விடுங்கள் .
பளுப்புச் சீனியை கறமல் புடிங்கில் தூவி விட்டு , சிறிய காஸ் சுவாலாயால் சூடேற்றுங்கள் .
பளுப்புச் சீனி உருகி மண்ணிறமாகப் படை போல வரும் . பின்பு சாப்பிடுங்கோ . ( சிலிண்டருடன் கூடிய சிறிய காஸ் சுவாலை ) .


செட்டிநாடு புளி குழம்பு
செட்டிநாடு புளி குழம்பு


தேவையான பொருட்கள்: 

சின்ன வெங்கயம்       -  1 கப் (பொடியாக‌ நறுக்கியது)
தக்காளி                 -  5  (பொடியாக‌ நறுக்கியது)
பூண்டு                   -  30 ‍‍‍‍‍‍‍‍‍பல்
மல்லி பொடி            -  3 டீஸ்பூன்
தேங்காய்                -  1/2 கப் (தனியாக அரைத்தது)
புளிக்கரைசல்            -  தேவைக்கேற்ப
உப்பு                     -  தேவைக்கேற்ப
நல்லெண்ணெய்         -  தேவைக்கேற்ப
கருவேப்பிலை          -  தாளிக்க
கடுகு                     -  தாளிக்க‌
தனியாக‌ வதக்கி அரைப்பதற்கு:
கடலை பருப்பு         -  5 டீஸ்பூன்
அரிசி                   -  3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்       -  8
சின்ன வெங்கயம்      -  1 கப் (பொடியாக‌ நறுக்கியது)
தக்காளி                 -  5  (பொடியாக‌ நறுக்கியது)

தயார் செய்யும் முறை: 
கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு , அரிசி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் , தக்காளி  சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
பின்னர் இதனை ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி கடுகு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின், உரித்த பூண்டு பற்களை(இரண்டாக கீறி கொள்ளவும்) சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
பின்னர் அரைத்த தக்காளி - வெங்காய  கலவை, மல்லி பொடி, ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இவையனைத்தும் வதங்கியதும், அரைத்த தேங்காய், தேவைக்கேற்ப புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.