Pages

mercredi 14 mai 2014

செட்டிநாடு நண்டு வறுவல்

images

தேவையான பொருட்கள் 
  • நண்டு – 5
  • பெரிய வெங்காயம் – 2
  • பூண்டு – 5 பல்
  • இஞ்சி – 1 அங்குலத் துண்டு
  • தக்காளி – 1
  • சின்ன வெங்காயம் – 50 கிராம்
  • சிகப்பு மிளகாய் – 10
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • தனியா – 2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. நடுத்தரமான அளவு நண்டுகள் 5 எடுத்து ஓடு நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
  2. இஞ்சி, பூண்டு, சிகப்பு மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், தனியா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  5. இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  6. இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், நண்டுகளைப் போடவும்
  7. நண்டுகள் நன்கு வெந்து, வாசனை வந்த பின் இறக்கவும்.
(செட்டிநாடு முறையில் சுவையான நண்டு வறுவல் செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு.)

குடைமிளகாய் சாதம்

index


தேவையான பொருட்கள்:

சாதம் – 2 கப்
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1
டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
மிளகு தூள் – 1/2
டீஸ்பூன் பட்டை – 1 துண்டு
துருவிய தேங்காய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1/2 டீஸ்பூன்


செய்முறை:


 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!!

ஜாங்கிரி

Indian Sweets: Jangiri - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
எண்ணெய் – வறுப்பதற்கு
ஏலக்காய் – 4
கலர் – தேவைப்பட்டால்
செய்முறை:
* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.
* சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
* மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.
* வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.
* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.
குறிப்பு:
நல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.

ஜாங்கிரினு சொன்னதும் பலருக்கும் ஒரு கேள்வி எழும்பும். ஜாங்கிரினா என்ன? ஜிலேபினா என்ன? அதுல என்னங்க வித்தியாசம். ரெண்டும் ஒன்னா இல்லையா?! நிச்சயமா வேற வேற தான். ஜாங்கிரி உளுந்துல செய்றது. மொறு மொறுனு இருக்கும். ஜிலேபி மைதா மாவுல செய்றது. மெதுவா இருக்கும். சக்கரபாகுல நல்லா ஊறியிருக்கும். இப்போ ஜாங்கிரி செய்து பாருங்க…. தீபாவளிய சுவையா கொண்டாடுங்க!

மட்டன் பக்கோடா

Diwali Special Non-Veg Recipe: Mutton Pakora - Cooking Recipes in Tamil


தேவையான பொருட்கள்:
மட்டன் – 7 (அ) 8 சின்ன துண்டுகள்
வெங்காயம் – 1/2
இஞ்சி, பூண்டு – 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
* குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
* பிறகு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 1 டம்ளர் தண்­ணீர் சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.
* கறி வெந்தவுடன் தண்­ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.
* பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும். தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்­ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.
* மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.
* பொரிப்பதற்கு எண்ணெயை காயவைத்து பொரித்து எடுக்கவும்.
* சுவையான மட்டன் பக்கோடா ரெடி.
இதே மாதிரி சிக்கன் பக்கோடாவும் செய்யலாம். எலும்புடன் அல்லது எலும்பில்லாமல், சிறு சிறு துண்டுகளாக வேக வைத்துக்கொள்ளவும்.

பழப் பாயசம்

Fruit Payasam - Sweet - Cooking Recipes in Tamil



ஆப்பிள் – பாதி
வாழைப்பழம் – 1
ஆரஞ்சு – 1
திராட்சை – அரை கப்
பேரிக்காய் – 1
முந்திரி – 6
காய்ந்த திராட்சை – 1
பால் – 5 கப்
வெனிலா கஸ்டர்ட் பவுடர் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – ஒன்றரை கப்
செய்முறை:-
4 கப் பாலை பொங்கக் காய்ச்சுங்கள். மீதியிருக்கும் 1 கப் காய்ச்சாத பாலில் கஸ்டர்ட் பவுடரைக் கரைத்து, காய்ச்சிய பாலில் சேருங்கள். அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, ஆறவிட்டு குளிரவையுங்கள். பழங்களை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். முந்திரியையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக குளிர வைத்த பாலில் சேர்த்துப் பரிமாறுங்கள். திருமண விருந்துகளுக்கான ஸ்பெஷல் பாயசம் இது.

சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ்


அரிசி – ஒரு கப் (ரைஸ் குக்கர் கப்)                                  


  • முட்டை – 4
வெங்காயம் – 2
  • தக்காளி – ஒன்று
  • பிரியாணி மசாலா – 2 1/2 தேக்கரண்டி
  • தயிர் – 3 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
  • மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
  • கொத்தமல்லித் தழை – சிறிது
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிக்க:
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • வரமிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • சோம்பு – அரை தேக்கரண்டி
  • பட்டை – ஒரு துண்டு
  • கிராம்பு – 2
அரிசியை வேகவைத்து உதிரியாக வடித்து ஆறவிடவும். முட்டையுடன் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடித்து ஆம்லெட் போட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் பிரியாணி மசாலா, தயிர் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
அதனுடன் ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும் வரை வேகவிடவும்.
பின் சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான ஆம்லெட் மசாலா ரைஸ் தயார்.

இராசவள்ளிக் கிழங்கு இனிப்பு கூழ்


இராசவள்ளிக் கிழங்கு – 1                                                                                                                                 

untitled,lloo0தேங்காய்ப்பால் (முதற்பால்) – 1/2 கப்
தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) – 2 கப்
சீனி – 1 – 11/2 கப்
உப்பு – 1 சிட்டிகை

•இராசவள்ளிக் கிழங்ககை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் – ~2 கப் வர வேண்டும்.
•பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும்.
•கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும்.
•சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும்.
•பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும்.
•ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
•சுவையான இராசவள்ளிக்கிழங்க் கூழ் தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல்லது ஆறவிட்டும் குடிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

Note:
தேங்காய்ப்பாலில் அவிய விடுவதற்குப் பதிலாக தண்ணீரில் அவிய விட்டும் இறுதியாக முதற்பால் விட்டும் இறக்கலாம். தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். இதனை சிறிது வற்றக் காய்ச்சி தடிப்பான பதத்தில் எடுத்து புடிங் கிண்ணத்தில் ஊற்றி(வட்டமான சிறிய கிண்ணங்கள்) ஆறியதும் ஃபிரீஸரினுள் வைத்து சிறிது இறுகியதும் புடிங் போலவும் சாப்பிடலாம். அல்லது கேக் பானில் ஊற்றி ஃபிரீஸரில் வைத்து சிறிது இறுகியதும் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்


முட்டை கொத்து பரோட்டா (Muttai Kothu Parotta)



தேவையான பொருட்கள்:                                                    
 
  • முட்டை -3
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி-2
  • கரம் மசாலா 1/2 tsp
  • மிளகாய்த்தூள்-1/2 tsp
  • தனிய தூள்-1/4 tsp
  • மஞ்சள்தூள்-1 சிட்டிகை
  • உப்பு
  • பரோட்டா-3
செய்முறை:

  1. செய்முறை:
    1. பரோட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளளவும்.அதனுடன் கரம் மசாலா,மிளகாய்த்தூள், தனிய தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
    3. வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அதனுடன் நறுக்கிய பரோட்டா சேர்த்து கொத்தி கொத்தி வதக்கவும்.
    4. அடுப்பை ஸிம்மில் வைத்து அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கொத்தி கலக்கவும்.காரம் தேவைபட்டால் மிளகு தூள் செத்து கிளறலாம் .
    5. நன்றாக வதக்கியதும் கொத்தமல்லிதழை,கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
    பரோட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.
  2. பரிமாறவும்.