Pages

dimanche 22 septembre 2013

KFC சிக்கன்


                                                                          KFC சிக்கன்
                                                                                      
  • கோழி தொடைப்பகுதி - 10
  • மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்                             
  • இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
  • முட்டை - 3
  • ப்ரட் க்ரம்ஸ் - தே.அளவு
  • எண்ணெய் - பொரிக்க
  • உப்பு - 1/2 ஸ்பூன்
    • கோழித் தொடைகளை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
    • பின் கோழியில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,இஞ்சி பூண்டு,எலுமிச்சை சாறு,உப்பு போட்டு பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும்.
    • முட்டைகளை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
    • ப்ரட் க்ரம்ஸை ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
    • ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைக்கவும்.
    • கோழிகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் க்ரம்ஸில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    Note:

    கோழியின் தொடைப்பகுதியாக இருந்தால் குழந்தைகள் பிடித்து சாப்பிட வசதியாக இருக்கும்.கோழியின் மற்ற சதைப் பகுதியிலும் செய்யலாம்.எலும்பில்லாத வெறும் சதைத் துண்டிலும் இவ்வாறு செய்தால் நன்றாக இருக்கும்.கோழியில் மசாலாக்களை பிரட்டி ஊற வைப்பதால் சுவை கோழியில் நன்றாக ஊறி இருக்கும்.கோழியை சூடாக சாப்பிடனும்.அப்போதான் க்ரிஸ்பியாக இருக்கும்.இதை உணவுடனும் பரிமாறலாம் & வெறுமனே சாப்பிடலாம்.இதை எண்ணெயில் மூழ்கும்படியும் பொரிக்கலாம் அல்லது மீன் பொரிப்பது போலும் எல்லா பக்கமும் திருப்பிவிட்டு பொரிக்கலாம்.

    கருணைக்கிழங்கு மசியல்


    கருணைக்கிழங்கு மசியல்
     
     
    




  • கருணைகிழங்கு - 1/4 கிலோ                                   
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  • கருவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  • இரால் வரட்டியது - 10
  • சின்ன வெங்காயம் - 10 ( நறுக்கியதில் 2 தாளிப்புக்கு தனியாக எடுத்து வைக்கவும் )
  • மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - சிறிது
  • தேங்காய் விழுது- 1 மேசைக்கரண்டி
    • முதலில் கருணைகிழங்கை நன்கு அவித்து தோலை நீக்கி கையால் மசித்துக்கொள்ளவும்.
    • பின் கிழங்கில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போடவும்.
    • பின் புளியை கெட்டியாக கரைத்து அதையும் கிழங்குடன் சேர்க்கவும்.பின்பு அதில் உப்பு, மசாலாதூள்,மஞ்சள்தூள்,ஆகியவற்றை சேர்த்து பிசைந்துவைக்கவும்.
    • பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது வெங்காயம்
    • போட்டு பொரிந்ததும் பாதி எண்ணெய்யை கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
    • பின் மீதி உள்ள எண்ணெய்யில் கருவேப்பிலை, இராலையும் போட்டு வதக்கவும்.
    • பின் பிசைந்து வைத்த கிழங்கை சேர்த்து கிளறி தீயை லேசாக வைத்து கொதிக்க விடவும்.
    • நன்கு கொதித பிறகு தேங்காய் விழுதை சேர்த்து கிளறி சிறிது நேரம் தணலில் வைத்து கிண்ணத்தில் எடுத்து வைத்த எண்ணெய்யை ஊற்றி இறக்கவும்.

     

    இஞ்சி துவையல்

    இஞ்சி துவையல்
     
     
    

  • இஞ்சி - 100 கிராம்
  • கடுகு - ஒரு தேக்கரண்டி                                                     
  • தேங்காய்ப்பூ - அரை மூடி
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • வெங்காயம் - அரை பாகம்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • தேசிக்காய் புளி(லெமன் ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
    • ஒரு சிறிய தாட்சியில் (வாணலியில்) எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம் (கால் பாகம்) போட்டு ஒரளவு பொரிய விடவும்.
    • அது ஒரளவு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
    • வெட்டிய இஞ்சி துண்டுகளுடன், வெங்காயம் (கால் பாகம்), உப்பு, கறிவேப்பிலை, தேசிக்காய்புளி(லெமன் ஜூஸ்) போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
    • பின்பு தாளித்தவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும்.

    Note:

    ஜீரணத்திற்கு, நெஞ்செரிச்சல், வயிற்று பொருமலுக்கு இது அவசியமான ஒன்று இஞ்சி ஆகும். இதில் செய்யப்படும் துவையலின் சுவை எப்படியிருக்கும் என்பதை நீங்களே செய்து சாப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள். இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல் உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும்.