Pages

mardi 11 décembre 2012

கறிக் குழம்பு

 


தேவையான பொருட்கள்:
கறி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 200 கிராம்
 (பொடியாக வெட்டவும்)
நாட்டுத் தக்காளி – 5 பொடியாக வெட்டவும்   
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு, பட்டை – தாளிப்பதற்கு தேவையானது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து, கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டையும் சேர்த்து வதக்கி, தக்காளி, கறி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள் எல்லாவற்றையும் போட்டு எண்ணெய் கக்கும் வரை வதக்கி, பச்சை வாசனை போன பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக விடவும். கறி நன்றாக வெந்த பிறகு கருவேப்பிலையைத் தூவி மூடி இறக்கி வைக்கவும்.
குறிப்பு: தேவைப்பட்டால் முந்திரி – 5, தேங்காய் – கால் மூடி சேர்த்து அரைத்து குழம்பு இறக்கும் பொழுது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

பீன்ஸ் சூப்

 

தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 100 கிராம்
தக்காளி - 2
தண்ணீர் - 150 மி.லி
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1
பெரிய வெங்காயம் - 1
கார்ன் ப்ளார் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
செய்முறை

பீன்ஸ், காரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சூடாகியதும் வெண்ணெய் விட்டு, நறுக்கிய பீன்ஸ், காரட் வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர எல்லாப் பொருட்களையும் சேர்த்து நீர் விட்டு அரை மணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும், கார்ன் ப்ளாரில் பால் அல்லது தண்ணீர் விட்டு கரைத்து அடுப்பில் உள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் ஒரளவு கெட்டியானவுடன் இறக்கிப் பரிமாறவும்.

நண்டு சூப்

 

தேவையான பொருட்கள்:            
Photo : வாங்க சாப்பிடுவோம்நண்டு – அரை கிலோ
வெங்காயத்தாள் – 3
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
கான்ப்ளவர் – ஒன்றரை டீஸ்பூன்
அஜினாமோட்டோ – கால் டீஸ்பூன்
பால் – கால் கப்
வெண்ணெய் அல்லது எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:
 நண்டு வேக வைத்து சதை எடுத்து வைக்கவும். (இல்லையென்றால் அப்படியே கூட போடலாம்) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கி (வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவும். கடைசியில் தூவி பரிமாறுவதற்காக) (பாலில் கான் ப்ளவரை கரைத்து வைக்கவும்). வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினாமோட்டோ, கான் ப்ளவர் கலந்த பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத்தூள் தூவி, வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

 

முந்திரி பருப்பு பகோடா


 

தேவை:                                                                    

Photo : இதயம் எல்லோருக்கும் இருக்கு....ஆனால்.......
சிலரிடம் பஞ்சாகவும்...........
சிலரிடம் கல்லாகவும் இருக்கு.
முந்திரி – 250 கிராம்
கடலை மாவு – 1 கிலோ
வனஸ்பதி – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 250 கிராம்
அரிசி மாவு – 150 கிராம்
ப. மிளகாய் – 5
கறிவேப்பிலை – 3 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வனஸ்பதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு இவற்றை போட்டு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளி போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.