Pages

mercredi 24 octobre 2012

கணவாய் பொரிந்து

தேவையான பொருட்கள்:


கணவாய் சுத்தம் செய்யதப் பட்டது- 1பக்கெட் (அல்லது 10 கணவாய்)
கீரை-15- 20 இலை
இஞ்சி- அரைத்தது 2 மேசைகரண்டி            
உள்ளி- அரைத்தது 2 மேசைகரண்டி
சிவப்பு வெங்காயம்-1
கருவேப்பிலை- 15
தக்காளிப் பழம்- 1
பழப்புளி- 1 மேசைகரண்டி
ஒலிவ் எண்ணெய்- 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை- தேவையான அளவு
சின்னச் சீரகம்- தேவையான அளவு
கடுகு- தேவையான அளவு
மிளகாய்த் தூள்- தேவையான அளவு
மஞ்சள் தூள்- தேவையான அளவு
கரும்மசாலா தூள்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine)- 150 ml
பால் (தேங்காய் பால்- கொழுப்பு குறைந்தவர்களுக்கு, ஆடை நீக்கப் பட்ட பசுப் பால்- கொழுப்பு கூடியவர்களுக்கு)

செய்முறை:

வெங்காயம், தக்களிப்பழம், கீரை, கொத்தமல்லி இலை இவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
உள்ளி, இஞ்சி இவற்றை பசையாக அரைத்து எடுக்கவும்.
ஏற்கனவே சுத்தம் செய்யப் பட்ட கணவாயை நடுத்தர துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பு, மிளகாய்த் தூள், கரும்மசாலத் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, உள்ளி (அரைத்தது), சிவப்பு திராட்சாசை பழச்சாறு (redwine) இவற்றை சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
சிவப்பு வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி இன்னொரு பாத்திரத்தில் எண்ணெயை விட்டு பொரிக்கவும்.
வெங்காயம் பொரிந்து வரும் போது, கடுகு, சீரகம், கருவேப்பிலை, தக்காளிப் பழம் இவற்றையும் சேர்க்கவும்.
பழப்புளியை (அரைக் கோப்பை இளஞ்சூட்டு நீரில் கரைத்து) பொரிந்து வரும் கலவையுடன் கலக்கவும், அதனுடனையே பசுப்பால் அல்லது தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும். (பாலையும், புளியயும் சேர்த்தால் திரைஞ்சது போல் வரும், ஆனால் சில நிமிடங்களில் கலவையில் திரைவுத்தன்மை போய்விடும்.)
இப்போது ஊறவைத்து இருந்த கணவாய் கலவையை அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு, கலந்து மூடியால் மூடி விடவும். (அடுப்பு நெருப்பையும் மிதமான அளவில் விடவும்)
15-20 நிமிடங்களில் கணவாய் அவிந்து விடும். ஒன்று எடுத்து ருசி பாருங்கள், உங்களுக்கு ஏற்ற நிலையில் அவியவில்லை என்றால், தொடர்ந்து 5-10 நிமிடங்களுக்கு அவிய விடுங்கள்.
சட்டியில் உள்ள நீர்த் தன்மை வற்றிய பின்பு, சிறிது நேரம் அதில் உள்ள எண்ணெயில் பொரிய விடுங்கள். பொரிந்து வரும் போது சிறிதாக வெட்டி வைத்த கீரையையும், கொத்தமல்லி இலையும் சேர்த்து ஒரு நிமிடம் மூடி இறக்கி விடுங்கள்.

jeudi 18 octobre 2012

மீன் பிரியாணி

பிரியாணி வகைகள் எல்லோரும் பிரியமுடன் சாப்பிடக்கூடியது. மீன் மனித உடலுக்கு அவசியமான ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் மீன் பிரியாணி சமைக்க எளிதானது. சுவையிலும் சூப்பர் என்று சொல்ல வைக்கக் கூடியது. அதை செய்து ருசித்துப் பாருங்களேன், புரியும்!
தேவையான பொருட்கள்:                                                   
மீன் – 1/4 கிலோ
அரிசி – 2 ஆழாக்கு
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலை – 1/4 கட்டு
மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1/2 குழிக் கரண்டி
செய்முறை:
* மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்கவும். தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் “தம்” சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும்.
* குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும்.
* சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.

அவல் பொங்கல் செஞ்சு பாருங்க…

இந்த பொங்கலுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…. அவல் பொங்கல் செஞ்சு பாருங்க… வித்தியாசமான சுவையுடன் பிரமாதமாக இருக்கும்……..
 
தேவையான பொருட்கள்:
அவல் – 1/2 கிலோ                                                                  
வெல்லம் – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 150 கிராம்
ஏலக்காய் – 6
கிஸ்மிஸ் பழம் – 20
தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் – 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது – 1 கப்
நெய் – 100 கிராம்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
 
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.

இறால் வடை

தேவையானவை !
இறால் – 10
வெங்காயம் – ஒன்று(நடுத்தர அளவு)                                       
காய்ந்த மிளகாய் – ஒன்று
இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
முட்டை – ஒன்று
மஞ்சள் தூள் – அரை மேசைக்கரண்டி
சீரக தூள் – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் விழுது – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 10
கொத்தமல்லி தழை – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை !
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.
வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.
இறாலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சுத்தம் செய்த இறால், முட்டை, மிளகாய் வற்றல், இஞ்சி பூண்டு விழுது, சீரக தூள், மஞ்சள் தூள், தேங்காய் விழுது சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து 5 – 10 நொடி அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையில் ஒரு மேசைக்கரண்டி எடுத்து எண்ணெயில் விடவும் 20 நிமிடங்கள் இரண்டு பக்கமும் நன்கு வேக விடவும். தீயை மிதமாக வைக்கவும்.
வெந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும். சுவையான இறால் வடை தயார்.

வெஜிடபிள் கட்லட் செய்து பழகுவோமா??



தேவையானவை:                                                                       
 
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
பீன்ஸ் – 6
காரட் – 1
பச்சைபட்டாணி – 1 கப் பிடிஅளவு
கரம்மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கு
மயோனைஸ் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சுவைக்கு
பொட்டுக்கடலை பவுடர் – 1/4 கப்
பச்சைமிளகாய்விழுது – 1 டீஸ்பூன்
டால்டா – தேவைக்கு
 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
காரட், பீன்ஸை மிகப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து பட்டாணியுடன் வேக வைக்கவும். மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
நீர்க்க இருந்தால் இன்னும் சிறிது பொட்டுக்கடலை பொடி சேர்க்கவும். மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் ஓரிரு டீஸ்பூன் நீர் சேர்த்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
இதனை ஒரு ஆரஞ்ச் பழ அளவு எடுத்து வட்டமாக தட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் டால்டா விட்டு மிதமான தீயில் முறுகலாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்கவும்.
இதே போல் மீதமுள்ள விழுதில் ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
நான்காக அல்லது ஆறாக கட் செய்து ஆனியன் ரிங்க், வட்டமாக நறுக்கிய கேரட், வெள்ளரி தூவி அலங்கரிக்கவும்.

dimanche 14 octobre 2012

நூடுல்ஸ்- இறால்



தேவையானவை:
 
மெகி நூடுல்ஸ்- ஒரு பாக்கெட்
இறால்- 20 துண்டுகள்
முட்டை-2
மிளகு- கால் ஸ்பூன்
வெங்காயம்-1
கேரட்-25 கிராம்
முட்டைகோஸ்-50 கிராம்
பீன்ஸ்-25 கிராம்
கறிவேப்பிலை-6 இலைகள்
பச்சைமிளகாய்-1
பூடு-6 பல்
உப்பு-தேவைக்கு
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
எண்ணெய்-4 ஸ்பூன்
 
 
செய்முறை:
 
மேகியை சுடுநீரில் வேக வைத்து நீர் வடித்து எடுக்கவும். குளிந்த நீரில் கழுவிய பின் எண்ணெய் தடவி வைக்கவும்.
முட்டையை உப்பு,மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூடு சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும்.
பின்னர் காய்கறி வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
இப்போது நூடுல்ஸ் மற்றும் முட்டை சேர்த்து காய்கறி ஒரு சேர வதக்கிவிடவும்.
பின் இறக்கி பரிமாறவும்.
குறிப்பு:
மேகி மசாலா தூளே தேவையான நிறத்தை கொடுத்துவிடும். அதனால் பொடி வேறு எதுவும் சேர்க்கத்தேவையில்லை.