Pages

mercredi 11 juillet 2012

முருங்கைப்பூ கூட்டு



முருங்கைப்பூ - 2 கைப்பிடி
  • 2. கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
  • 3. பயத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • 4. இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
  • 5. வெங்காயம் - 1
  • 6. தக்காளி - 1
  • 7. பச்சை மிளகாய் - 2
  • 8. மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
  • 9. மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
  • 10. தனியாதூள் - 1 தேக்கரண்டி
  • 11. உப்பு - தேவைக்கு
  • 12. தேங்காய் விழுது - 2 அ 3 தேக்கரண்டி
  • தாளிக்க:
  • 1. பட்டை - ஒரு சிறு துண்டு
  • 2. லவங்கம் - 2 அ 3
  • 3. சோம்பு - 1/4 தேகரண்டி
  • 4. கறிவேப்பிலை - சிறிது
  • 5. எண்ணெய் - தேவைக்கு
    • முருங்கைப்பூவை அலசி,சுத்தப் படுத்திக் கொள்ளவும்.கடலைப்பருப்பு மற்றும் பயத்தம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
    • கடாயில், எண்ணெய் ஊற்றி,தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
    • பின்,தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.இதனுடன் முருங்கைப்பூ சேர்த்து,மஞ்சள்தூள், மிளகாய்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.
    • முருங்கைப்பூ வெந்ததும்,அதனுடன் வேக வைத்த பருப்பு கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.பின், தேங்காய் விழுது சேர்த்து ஒரு கொதி வந்த்ததும்,இறக்கி விடவும்.
    • சுவையான முருங்கைப்பூ கூட்டு தயார். இது தோசை,சப்பாத்தி,சாதத்துடன் நன்றாக இருக்கும்.

    Note:

    முருங்கையின் அனைத்து பாகங்களும்(முருங்கைக்காய், முருங்கைகீரை,முருங்கைப்பூ) சத்து நிறைந்தவை. முருங்கைப் பூவை யாரும் அவ்வளவாக உபயோகிப்பது இல்லை. இம்முறையில் கூட்டு செய்தால், சுவையாகவும் இருக்கும். அதன் சத்தும் கிடைக்கும்.

    jeudi 5 juillet 2012

    கோழிக்கறி வெள்ளை குருமா

  • கோழிக்கறி - 1/2 கிலோ
  • பெரிய வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • முந்திரி - 10
  • மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  • தனியா தூள் - 3 தேக்கரண்டி
  • கெட்டியான தேங்காய் பால் - 2 கப்
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 3 ஸ்பூன்.
    • கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
    • முந்திரியை நைசாக அரைத்து வைக்கவும்.
    • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
    • வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போடவும்.
    • பிறகு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    • வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    • பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
    • நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
    • கோழிக்கறி நன்கு வதங்கிய பின்னர் மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
    • கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.
    • கோழிக்கறி முழுவதும் வெந்த பின் அரைத்த முந்திரி சேர்த்து கலக்கி உடனே இறக்கவும்.
    • அதன் மீது வறுத்த முந்திரி தூவி சூடாக பரிமாறவும். சுவையான ஒயிட் சிக்கன் குருமா தயார்.

    Note:

    நெய் சோறு, புலாவ், சாதம் போன்றவற்றிற்கு வெகு பொருத்தமாக இருக்கும்.

    பொன்னாங்கண்ணி கீரை கூட்டு

  • பொன்னாங்கண்ணி கீரை - 2 கப் ( ஆய்ந்தது)
  • பாசிப்பருப்பு - அரை கப்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் - 5
  • தனியா - அரை மேசைக்கரண்டி
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
  • தக்காளி - ஒன்று
  • பால் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
    • கீரையோடு மஞ்சள் தூள், பருப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    • வாணலியில் மிளகாய், தனியா, துவரம் பருப்பு, சீரகம் எல்லாவற்றையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் நைசாக பொடிக்கவும்.
    • குக்கரை திறந்து கீரையை லேசாக மசித்து பொடித்த பொடியை சேர்க்கவும்.
    • பின் உப்பு, தக்காளி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். கெட்டியான பின் பால் சேர்த்து இறக்கவும்.

    

    மாம்பழ கறி

  • 1
  • . ரொம்ப பழுக்காத மாம்பழம் - 1
  • 2. பச்சை மிளகாய் - 1
  • 3. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  • 4. மிளகாய் வற்றல் - 1
  • 5. தயிர் - 1/2 கப்
  • 6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • 7. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  • 8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • 9. உப்பு
  • 10. கறிவேப்பிலை
  • 11. கடுகு, வெந்தயம் - தாளிக்க
  • 12. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • 13. வெங்காயம் - 1/2 [விரும்பினால்]
  • 14. கொத்தமல்லி இலை
  • 15. சீரகம் - 1/4 தேக்கரண்டி
    • மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டவும்.
    • இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து தேவையான நீர் விட்டு வேக விடவும்.
    • தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
    • மாம்பழம் சாஃப்டானதும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
    • பின் தயிரை அடித்து இதில் கலந்து விடவும்.
    • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கி மாம்பழ கலவையில் சேர்க்கவும்.
    • எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி எடுக்கவும்.