Pages

mercredi 29 février 2012

இஞ்சி துவையல்

  • இஞ்சி - 100 கிராம்
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • தேங்காய்ப்பூ - அரை மூடி
  • எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • வெங்காயம் - அரை பாகம்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • தேசிக்காய் புளி(லெமன் ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
    • ஒரு சிறிய தாட்சியில் (வாணலியில்) எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம் (கால் பாகம்) போட்டு ஒரளவு பொரிய விடவும்.
    • அது ஒரளவு பொரிந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
    • வெட்டிய இஞ்சி துண்டுகளுடன், வெங்காயம் (கால் பாகம்), உப்பு, கறிவேப்பிலை, தேசிக்காய்புளி(லெமன் ஜூஸ்) போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
    • பின்பு தாளித்தவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும்.

     

    ஜீரணத்திற்கு, நெஞ்செரிச்சல், வயிற்று பொருமலுக்கு இது அவசியமான ஒன்று இஞ்சி ஆகும். இதில் செய்யப்படும் துவையலின் சுவை எப்படியிருக்கும் என்பதை நீங்களே செய்து சாப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள். இருதய நோயாளர் தேங்காய்ப்பூ சேர்க்காமல் உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து கொள்ளவும்.

    பூசணிக்காய் புட்டிங்


  • பூசணிக்காய் - 1/2 கிலோ

  • கன்டென்ஸ்ட் மில்க் - 8 ஸ்பூன்

  • சைனா க்ராஸ் - உதிர்த்தது 1 கப்

  • பால் - 2 கப்

  • வனிலா எசென்ஸ் - 2 துளி

  • பிஸ்தா நறுக்கியது - சிறிது

    • பூசணிக்காயை சதுரங்களாக நறுக்கி 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

    • பின்பு சைனா க்ராசை ஊற வைத்து சிறிது தண்ணீரில்நன்கு கரைய கொதிக்க விட்டு அதில் பால் மற்றும் கன்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்

    • சுவைக்கு 1 பின்ச் உப்பும் தேவையெனில் இனியும் இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம்

    • பின்பு பூசணிக்காய் சேர்த்து ஒரு துளி எசென்ஸ் விட்டு கலக்கி பரந்த ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேலே பிஸ்தா தூவி கட்டியாக விடவும்

    mardi 21 février 2012

    பால் சுறா புட்டு



    தேவையான பொருட்கள்:
    chettinadsuraputtu
    பால் சுறா - 1/2 கிலோ
    பெரிய வெங்காயம் – 2
    பச்சை மிளகாய் – 5
    பூண்டு – 10
    கொத்தமல்லி – 1 கொடி
    கறிவேப்பிலை – 1 கொடி
    தாளிக்க சோம்பு - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    எண்ணெய் – தேவையான அளவு


    செய்முறை:


    பால் சுறா, தோல் வெள்ளையாக மெல்லியதாக இருக்கும். எளிதாக வேக வைக்கலாம். சுறாவை மஞ்சள் தூள் போட்டு வேக விட்டு தோல் உரித்து முள் எடுத்து உதிர்த்து வைக்கவும்.
    அதில் உப்பு, மிளகாய் போட்டு பிசைந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி பிசைந்த மீனை போட்டு உதிரியாக வரும் வரை கிளறி எடுக்கவும்.

    குறிப்பு: கறுப்பாக உள்ள சுறா மீன், எருமை சுறா. இதை குக்கரில் போட்டால் கூட வேகாது. ருசியும் இருக்காது. வெள்ளை நிறத்தில் உள்ள சுறா தான் பால் சுறா; நல்ல ருசியாக இருக்கும் சீக்கிரம்
    வேகும்.

    dimanche 19 février 2012

    அரிசி பாயசம்

     
     
    தேவையான பொருட்கள்

    அரிசி - 200 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    முந்திரி - 15
    ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
    திராட்சை - 15
    நெய் - 50 கிராம்
    தேங்காய் துருவியது - சிறிதளவு
    மில்க் மெய்டு - 2 ஸ்பூன்

    செய்முறை

    1. முதலில் அரிசியை நன்கு வறுத்து பொடியாக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் கொட்டி வேக விடவும்.

    2. அரிசி வெந்ததும் வெல்லத்தைப் போட்டு கலக்கவும்.

    3. பிறகு மில்க் மெய்டு சேர்க்கவும்.

    4. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்

    5. பொடி செய்த ஏலக்காயையும் தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கி வைக்கவும்.

    குறிப்பு

    1. தேவையானால் மில்க் மெய்டுக்கு பதில் பால் சேர்த்துச் செய்யலாம்.

    கோதுமை ரவை இட்லி


    
    தேவையானபொருட்கள்
    கோதுமைரவை-1கப்
    கடலைப்பருப்பு-2டேபிள்ஸ்பூன்
    புளித்த தயிர்-1கப்
    எண்ணெய்-1டீஸ்பூன்
    உப்பு-தேவைக்கேற்ப
    பச்சைமிளகாய்-1
    கொத்தமல்லி-சிறிது
    மிளகு-1/4டீஸ்பூன்
    செய்முறை
    பச்சைமிளகாய்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமைரவையையும்,கடலைப்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறியவுடன் இதனை மிக்ஸியில் போட்டு உப்பு,மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புளித்ததயிர்,எண்ணெய் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை புளிக்க வைக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் சுடாகப் பரிமாறவும்.

    mardi 14 février 2012

    பாகற்காய் குழம்பு

  • 1. பாகற்காய் - 2
  • 2. பெரிய வெங்காயம் - 1
  • 3. உப்பு, கறிவேப்பிலை
  • 4. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • 5. புளி - 1 நெல்லிக்காய் அள்வு
  • 6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 7. வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
  • வதக்கி அரைக்க:
  • 8. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  • 9. உளுந்து - 1 தேக்கரண்டி
  • 10. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  • 11. மிளகு - 1 தேக்கரண்டி
  • 12. சீரகம் - 1 தேக்கரண்டி
  • 13. மிளகாய் வற்றல் - 3
  • 14. தனியா - 1 தேக்கரண்டி
  • 15. சின்ன வெங்காயம் - 7
  • 16. தக்காளி - 1
  • 17. கறிவேப்பிலை - சிறிது
  • தாளிக்க:
  • 18. கடுகு, வெந்தயம்
    • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.
    • இதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
    • இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் தேவைக்கு நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
    • புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
    • வெல்லம் நீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
    • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறீவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.
    • இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேக விடவும்.
    • பின் புளி கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் கலந்த நீர் விட்டு ஒரு கொதி விட்டு எடுக்கவும்

    lundi 13 février 2012

    கறிவேப்பிலை துவையல்

  • கறிவேப்பிலை - 2 கப்
  • வரமிளகாய் - 4
  • தேங்காய் துருவல் - 1/4 மூடி
  • உப்பு
  • புளி - கோலி அளவு
  • எண்ணை - 2 ஸ்பூன்
    • கடாயில் எண்ணை விட்டு மிளகாயை வறுத்தெடுக்கவும். பின் கறிவேப்பிலை,தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்
    • உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைதெடுக்கவும்
    • இரும்பு சத்து மிக்க கறிவேப்பிலை துவையல் ரெடி
    • சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்

    உருளைக்கிழங்கு குருமா


  • 1. உருளைக்கிழங்கு - 2 (Medium Size)

  • 2. வெங்காயம் - 1 (Medium Size)

  • 3. தக்காளி - 2 (Small)

  • 4. மஞ்சள் தூள் - சிறிது

  • 5. உப்பு

  • 6. கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது

  • அரைக்க:

  • 7. தேங்காய் துருவல் - 1/2 கப்

  • 8. மிளகாய் வற்றல் - 3

  • 9. தனியா - 1/2 மேஜைக்கரண்டி

  • 10. சோம்பு - 1/4 தேக்கரண்டி

  • தாளிக்க:

  • 11. கடுகு - 1/4 தேக்கரண்டி

  • 12. சோம்பு - 1/4 தேக்கரண்டி

  • 13. பிரியாணி இலை - 1

    • உருளையை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

    • அரைக்க கொடுத்துள்ளவை அனைத்தையும் தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.

    • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

    • இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    • பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    • இதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரைத்த மசாலா, தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.

    • உருளை நன்றாக வெந்து குழைய துவங்கி, எண்ணெய் பிரிந்து மசாலா பதம் வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி எடுக்கவும்.

    வெண்டைக்காய் புளிக்குழம்பு



    செய்முறை:


    250 கிராம் வெண்டைக்காயை சுத்தம் செய்து பெரிய வில்லைகளாக நறுக்கி 2 கரண்டி எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு வெடித்ததும் நறுக்கிய 4 வெங்காயம், 1 பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் 2 சில் தேங்காயை பால் எடுத்து அரைத் மசால், உப்பு, மஞ்சள் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவும். குழம்பு வற்றிவரும் போது நெல்லிக்காயளவு புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கவும்.

    dimanche 12 février 2012

    ஆப்பம்

    தேவை:


    பச்சரிசி – 500 கிராம்
    சோடா உப்பு, உப்பு – சிறிதளவு
    தேங்காய் – 1 மூடி பால் எடுக்கவும்
    புழுங்கல் அரிசி – 500 கிராம்
    ஏலம் பொடி – சிறிதளவு


    செய்முறை:


    அரிசியை நன்றாக ஊற வைத்து நன்றாக ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கும் முன் சிறிது உப்பு சோடா உப்பு, கலந்து வைக்கவும். காலையில் ஆப்பசட்டியில் சுடவும். தேங்காய் பாலில் சிறிது ஏலம் பொடி சேர்த்துக் கொள்ளவும். ஆப்பம் சுட்டு அதன் மேல் தேங்காய்ப்பால் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

    சீலா மீன் புட்டு



    தேவை:


    சீலா மீன் – 1/4 கிலோ
    இஞ்சி – சிறிய துண்டு
    வெங்காயம் – 10
    பச்சை மிளகாய் – 5
    பூண்டு – 4 பல்
    கடுகு, உளுந்தம் பருப்பு, உப்பு

    செய்முறை:


    மீனை இட்லிப்பானையில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதங்கிய பின் மீனை உப்பு கலந்து போட்டு நன்கு கிளறி இறக்கவும். விரும்பினால் முட்டை poriyal பண்ணிக் கலக்கலாம்.

    கோழிக்கறி



    தேவை:


    கோழிக்கறித் துண்டுகள் – 1 கிலோ
    இஞ்சி – 1 துண்டு
    பூண்டு – 10 பல்
    வரமிளகாய் – 10
    சீரகம் – 1 டீஸ்பூன்
    முந்திரிப்பருப்பு – 1/2 கப்
    பெ.வெங்காயம் – 2
    தக்காளி கெச்சப் – 3 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு


    செய்முறை:


    இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து கோழிக்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய் விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும். இக் கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்

    மீன் வறுவல்

    chettinadfishfry

     

     

    தேவையான பொருட்கள்:


    வஞ்சிர மீன் – அரை கிலோ
    புளி கெட்டிச்சாறு – 4 டீஸ்பூன்
    வரமிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
    உப்பு – அரை டீஸ்பூனு
    கரம் மசாலா – அரை டீஸ்பூன்
    கடலை மாவு – ஒன்றரை டீஸ்பூன்
    செய்முறை:
    வஞ்சிர மீனில் மேல் கூறிய பொருட்கள் கலந்த கலவையை மீனில் தடவி 1 மணி நேரம் ஊற விட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
    கடலை மாவு சேர்த்தால் தான் மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டிக் கொள்ளும்.

     

     

    கோதுமை ரவை பொங்கல்

    தேவையானபொருட்கள்

    கோதுமை ரவை – 1 கப்
    பாசிப்பருப்பு – 1/4 கப்
    மிளகு – 1/2 டீஸ்பூன்
    சீரகம் – 1/2 டீஸ்பூன்
    இஞ்சி விழுது – 1/4 டீஸ்பூன்
    முந்திரி – 2
    சன் ப்ளவர் ஆயில் – 3 டீஸ்பூன்
    தண்ணீர் – 3 கப்
    உப்பு – தேவையான அளவு
    கறிவேப்பிலை – சிறிது

    செய்முறை

    ஒரு குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும். பின் பாசிப் பருப்பையும் போட்டு லேசாக வறுக்கவும். பின்னர் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி விழுது, உப்பு சேர்த்து குக்கரை முடி 2 விசில் வரும் வரை வேக விடவும். வெந்தவுடன் முடியைத் திறந்து நன்கு கிளறவும். ஒரு வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் மிளகு, சீரகம் போட்டு தாளித்து, பின் முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    கோழிக்கறி



    தேவையான பொருட்கள்:

    கோழிக்கறி – அரை கிலோ
    சின்ன வெங்காயம் – 100 கிராம்
    மிளகு - 3 ஸ்பூன் /தேவையான அளவு
    சோம்பு – 1 ஸ்பூன்
    சீரகம் – 1 ஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
    கருவேப்பிலை – சிறிது
    உப்பு – தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    மிளகு, சோம்பு, சீரகம் மூன்றையும் சிவக்க வறுத்து பொடி செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி கோழிக்கறியைப் போட்டு மஞ்சள் தூளை போட்டு நன்றாக வதக்கி தண்ணீர் வற்றிய பிறகு உப்பு சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்து, தண்ணீர் வற்றிய பிறகு வறுத்து அரைத்த பொடியைப் போட்டு தீயைக் குறைத்து சுருள சுருள வதக்கி இறக்கி கருவேப்பிலை போட்டு மூடி சிறிது நேரம் கழித்து கிளறி பரிமாறவும்.